/tamil-ie/media/media_files/uploads/2019/02/anirudh-ravichander.jpg)
ரஜினிகாந்த் - அனிருத்
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலுக்கு ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடியுள்ள நிலையில், இது குறித்து வீடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். 2024-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் வேட்டையன். படத்தில்,அமிதாப் பச்சன்,பகத் பாசில்,ராணா,மஞ்சுவாரியார்,ரித்திகா சிங்,துஷாரா விஜயன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார்.
தென மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வேட்டையன்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் ரஜினிகாந்த் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலும், கண்ணாடி அணிந்தபடியும் ஸ்டைலாக இருந்தார்.
வரும் அக்டோபர் மாதம் வேட்டையன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அனிருத் - ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடனமாடுகின்றனர்.
#Vettaiyan opening song #Thalaivar mass 🔥#CoolieDisco#Anirudhpic.twitter.com/DDTUjC6cA6
— Venniradai Moorthy (@samuel__Robin) April 30, 2024
இந்த வீடியோவில் டான்சர்ஸ் அனைவரும் நடனமாடிக்கொண்டிருக்க, அப்போது ரஜினிகாந்த் என்ட்ரி ஆகிறார். அவருடன் இணைந்து நடனமாடும் அனிருத், நடனம் முடிந்தவுடன் ரஜினியுடன் கை குலுக்கிவிட்டு அவருடன் சென்றுவிடுகிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தலைவர் படத்தில் அனிருத் நடனமாடுகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனுஷின் மாரி படத்தின் முதல் பாடலில் அவருடன் இணைந்து அனிருத் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.