/indian-express-tamil/media/media_files/2025/06/15/A8ozDYM3IIRs9x6hoOBn.jpg)
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் தொழிலதிபர் காவ்யா மாறன் திருமணம் குறித்த வதந்திகள். கடந்த சில வாரங்களாக இந்தச் செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வந்தது. குறிப்பாக ரெடிட் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில், அனிருத் மற்றும் காவ்யா ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில், (முன்னாள் ட்விட்டர்) அதிரடியான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "திருமணமா? லோல்... அமைதியா இருங்கப்பா. வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்" (Marriage ah? lol .. Chill out guys. Pls stop spreading rumours.) என்று அவர் குறிப்பிட்டிருந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அனிருத்தின் இந்த பதிவு, அவர் மீதான தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்த யூகங்களுக்கு ஒரு தெளிவான பதிலைக் கொடுத்துள்ளது.
திருமண வதந்திகளில் அடிபட்ட காவ்யா மாறன், ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சி.இ.ஒ ஆவார். இவர் சன் குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான ஊடக அதிபர் கலாநிதி மாறனின் மகள். ஐபிஎல் போட்டிகளின் போது அவர் மைதானத்தில் இருப்பதை பார்க்கலாம். அவரது உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளன.
Marriage ah? lol .. Chill out guys 😃 pls stop spreading rumours 🙏🏻
— Anirudh Ravichander (@anirudhofficial) June 14, 2025
அனிருத் மற்றும் காவ்யா பொது நிகழ்ச்சிகளிலும், தனிப்பட்ட சந்திப்புகளிலும் ஒன்றாகக் காணப்பட்டதாகவும், அவர்கள் ஒன்றாக விடுமுறைக்குச் சென்றதாகவும் பல ரசிகர் வலைதளங்களின் மூலம் வதந்திகள் பரவின. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனிருத்தின் உறவினர் என்பதால், கலாநிதி மாறனிடம் தனிப்பட்ட முறையில் இவர்களது உறவு குறித்துப் பேசியதாகவும் சில வதந்திகள் கிளம்பின. ஆனால், அனிருத்தின் சமீபத்திய பதிவு இந்த அனைத்து யூகங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அனிருத் ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷுடன் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவின. 2023-ல் அவர்கள் இருவரும் திருமணம் செய்யப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், கீர்த்தி மற்றும் அனிருத் இருவருமே இதை திட்டவட்டமாக மறுத்தனர். பின்னர், கீர்த்தி சுரேஷ் 2024 டிசம்பரில் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். 'ஜவான்', 'லியோ', மற்றும் 'ஜெயிலர்' போன்ற பெரிய வெற்றிப் படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில், அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்திலும் அனிருத்தின் இசை இடம்பெற்றுள்ளது. மேலும், விஜய் தேவரகொண்டாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் படமான 'கிங்டம்' படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.