தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள லியோ படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் குறித்து முதல் விமர்சனமாக இசையமைப்பாளர் அனிருத்த வெளியிட்டுள் எக்ஸ் (ட்விட்டர்) பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் நடப்பு ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ள லியோ, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான முன்னி இசை பணிகளை முடித்துள்ள அனிருத், படம் குறித்து முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். நெருப்பு, வெடிகுண்டு மற்றும் கப் ஸ்மைலிகளுடன், 'லியோ' படத்திற்கான தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும 'லியோ' விமர்சனத்தை, 'ஜவான்' மற்றும் 'ஜெயிலர்' படங்களின் விமர்சனங்களுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். அனிருத்தின் இந்த ஸ்மைலிகள் மூலம் அவரது முந்தைய திரைப்பட விமர்சனங்களை விட லியோ அதிகமாக தெரிகிறது, எனவே ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்தின் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர்களை விட விஜய் நடித்த லியோ படம் சிறந்த வெற்றியைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
#Leo 🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥🏆🏆🏆🏆🏆
— Anirudh Ravichander (@anirudhofficial) October 9, 2023
படம் குறித்த பல உண்மைகள் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்காக எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 'லியோ' தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது, மேலும் படத்தை உலகம் முழுவதும் 25000 திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது விஜய்யின் மிகப்பெரிய ரிலீஸ் வசூல் சாதனை படைக்க உள்ளது.
படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே ஒரு சில மையங்களில் திறக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள மையங்களில் இந்த வார இறுதியில் முன்பதிவு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'லியோ'வுக்கான FDFS அக்டோபர் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும். தமிழகம், தயாரிப்பாளர்கள் சிறப்பு காலை காட்சிகளுக்காக அரசிடம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.