கமல்ஹாசன் முதல் உதயநிதி வரை... ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்

தமிழ் மட்டுமல்லாமல், இந்தி தெலுங்கு, மலையாளம், அரபு, ஆங்கிலம் என பன்மொழி படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்

தமிழ் மட்டுமல்லாமல், இந்தி தெலுங்கு, மலையாளம், அரபு, ஆங்கிலம் என பன்மொழி படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்

author-image
WebDesk
New Update
AR Rahman Jan 6

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம், திரையுலகில் இசையமைப்பாளராக புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இவர், மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், காதலன், , சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை பல படங்களில் தனது இசை திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல், இந்தி தெலுங்கு, மலையாளம், அரபு, ஆங்கிலம் என பன்மொழி படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்  அதேபோல் உதயநிதியின் கடைசி படமாக கடந்த ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படததில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை பலரலும் பாராட்டப்பட்டது.

Advertisment
Advertisements

அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால்சலாம், தனுஷூன் டி50, உள்ளிட்ட தமிழ் படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுதது வெளியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

A R Rahman Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: