இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான ஏ.ஆர்,ரஹ்மான் தான் தனது பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லக்கூடிய மிகப்பெரிய பாரம்பரியம் குறித்தும், அவர்கள் அதை எப்படி கையாள போகிறார்கள் என்பது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், இந்தியா சார்பில் 2 ஆஸ்கார் விருது வாங்கியவருமான ஏ.ஆர்.ரஹ்மான் அவ்வப்போது சமூக அக்கரையும் பல கருத்துக்களை பேசி வருகிறார். இவரின் கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதே சமயம் இசையில் பிஸியாக இருந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியளவில் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தனது பண சிக்கல்கள் குறித்து தனது குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்தும் பேசியுள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. 1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பரை திருமணம் செய்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என 3 குழந்தைகள் உள்ளனர். தனது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாரம்பரியத்தை தான் விட்டுச்செல்வதாகவும், அவர்கள் புத்திசாலித்தனமாக இல்லாவிட்டால், இந்த பாரம்பரியத்தை வீணடித்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
தான் இளம் வயதில் சந்தித்த பணக்கஷ்டம் குறித்து பேசியுள்ள ஏ,ஆர். ரஹ்மான், அந்த சிரமங்கள் தான் இன்று தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், கூறியுள்ளார். பணம் என்று வரும்போது தனது குழந்தைகளும் அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு விஷயத்தில் நான் மிகவும் தெளிவாக இருந்தேன்; நான் யாருக்காக பணத்தை விட்டுச் சென்றாலும், அவர்கள் புத்திசாலித்தனமாக இல்லாவிட்டால், மரபுகளைப் புரிந்து கொள்ளாவிட்டால் அது ஒரு நாளில் மறைந்துவிடும். அவர்கள் சரியன முடிவு எடுக்கவில்லை என்றால் எனது ஸ்டுடியோ ஒரு 'குடோனாக' மாறிவிடும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், எனது அம்மா மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து நான் மிகவும் பணக்கஷ்டத்தை சந்தித்தேன், ஆனால் அந்த பாடங்கள், என் அம்மாவுடன் நான் பகிர்ந்து கொண்ட சுமை, அதுதான் இன்று என்னை ஆளாக்கியுள்ளது. இப்போதும் கூட, அந்த அனுபவங்கள் தான் அடிப்படையான ஒரு விஷயத்தில் முடிவுகளை எடுக்க எனக்கு உதவுகின்றன. அதனால் நான் உண்மையில் என் குழந்தைகள் நடக்கும் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் வேண்டும்; அவர்களிடம் இருந்து எந்த கெட்ட செய்திகளையும், பிரச்சனைகளையும் மறைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் ஒரு கட்டிடத்திற்கு கடன் பெற்றாலும், அந்த கடனை திருப்பி அடைத்தாலும் அதை அவர்களிடம் சொல்லிவிடுகிறேன். இது அவர்களை கஷ்டப்படுத்துவதற்காக அல்ல, அவர்களும் வாழ்க்கையை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும் தான்.
என்னைப் பின்தொடர்ந்து இசையில் ஈடுபடுவது மற்றும் அந்தந்த பாதைகளை பட்டியலிடுவது என்று வரும்போது, இப்போதெல்லாம் மக்கள் நேபாட்டிசம் என் புதிய சொல்லைக் கற்றுக்கொண்டனர். நான் ஸ்டூடியோவில் இந்த அனைத்து பொருட்களையும் வைத்து இந்த முழு உலகத்தையும் கட்டினேன். இதில் என் குழந்தைகள் இதில் ஈடுபடவில்லை என்றால், இந்த இடம் முழுவதும் குடோனாக மாறிவிடும். ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு சுவரின் ஒவ்வொரு அங்குலமும், எனது ஸ்டுடியோவில் உள்ள ஒவ்வொரு நாற்காலியும் மிகவும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் தேர்வு செய்துள்ளேன். மேலும் எதிர்காலத்தில் என் பிள்ளைகள் என்னிடமிருந்து இந்த ஸ்டூடியோவின் பொறுப்புகளை ஏற்பார்கள் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
ரஹ்மானின் தந்தை இறந்தபோது அவருக்கு ஒன்பது வயதுதான். அதன்பிறகு மிக இளம் வயதிலேயே தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள தொடங்கியுள்ளார். ரஹ்மானின் மறைந்த தாயார் கரீமா பேகம், அவரைப் பள்ளியிலிருந்து நிறுத்தியபோது, அவர் தனது முழு நேரத்தையும் இசைக்காக ஒதுக்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம் தங்களது குடும்பத்திற்கு பணம் சம்பாதிக்க முடியும். "நாங்கள் வாழ, இசையைத் தொடரவும், பள்ளிப் படிப்பை நிறுத்தவும் அவரைக் கேட்டுக் கொண்டேன்,'' என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.