/tamil-ie/media/media_files/uploads/2023/03/ar-rahman.jpg)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்சசி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சிக்காக வந்த ரசிகர்கள் திரும்பி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியா சார்பில் 2 முறைய ஆஸ்கார் விருது வென்றுள்ள இவர், தற்போது பல படங்களில் பிஸியாக இசையமைத்து வருகிறார். இதனிடையே சென்னை பனையூரில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ.ஆா.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இசை நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். இன்று நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சி மழை காரணமாக மைதானத்தில் நீர் தேங்கியதாலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் பலரும் சோகத்துடன் வீடு திரும்பி வரும் நிலையில், வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால் பனையூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Heartfelt gratitude to each one of you who came forward and supported the ‘Save Lightman Fund’, through the proceeds from the Wings Of Love concert, the Rotary Club of Chennai Neithal and Rotary Club of Chennai Aristo with the @ARR_Foundation, continue to provide safety kits to… pic.twitter.com/GhJgu1COSU
— A.R.Rahman (@arrahman) June 28, 2023
இதனிடையே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஏ,ஆர்.ரஹ்மான், எனது அன்பான நண்பர்களே... பாதகமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக, எனது அன்புக்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக, சட்டப்பூர்வ அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் நிகழ்ச்சி வேறொரு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய தேதி குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வரும் என பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.