ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால்சலாம் படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், மறைந்த முன்னணி பாடகர்களின் குரல்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் கொண்டுவந்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது லால்சலாம் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில், விஷ்ணு விஷால், விக்ரந்த் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன்பாய் என்ற கேரக்டரில் சிறப்பு தொற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதனிடையே, வரும் பிப்ரவரி 24-ந்தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், லால்சலாம் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டது.
அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, திமிறி எழுடா என்கிற பாடலை, மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா, ஷாகுல் ஹமீது ஆகியோர் பாடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1997-ல் ஷாகுல் ஹமீது மரணமடைந்த நிலையில், பம்பா பாக்யா 2022-ம் ஆண்டு மரணமடைந்தார். ஷாகுல் ஹமீது இறந்து 27 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவரது குரலில் எப்படி பாடல் ஒலிக்கும் என்பது பலரின் கேள்வியாக இருந்தது.
இதனிடையே தற்போது, இன்றைய காலத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள, ஏ,ஐ தொழில்நுட்பத்தில், ஷாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை எடுத்து கொண்டு வந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரின் இந்த முயற்சி பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், பலருக்கும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இனி வரும் காலங்களில் மறைந்த பாடகர்களின் குரல்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“