/indian-express-tamil/media/media_files/Ql5Ny987KrttCCGwqYN0.jpg)
அஜித் - பரத்வாஜ் - விஜய்
விஜய் – அஜித் இருவருக்கும் இடையே போட்டி அதிகம் இருந்து வரும் நிலையில், விஜய்க்கு எதிராக ஒரு பாடல் வேண்டும் என்று அஜித் கேட்டு பெற்றதாக படத்தின் இசையமைப்பாளர் பரத்வாஜ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு போட்டி நடிகர் இருப்பர் வழக்கமாக இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினிகாந்த் – கமல்ஹாசன், என தொடங்கி விஜய் – அஜித், சூர்யா – விக்ரம், சிம்பு தனுஷ் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக போட்டி இருக்கும் நடிகர்கள் என்றால் அது விஜய் அஜித் இருவரும் தான்.
இருவருமே சமகாலத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ராஜாவின் பார்வையிலே என்ற ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தாலும், இவர்கள் இருவரும் நடித்த படங்கள் பலமுறை ஒரே நாளில் வெளியாகியுள்ளது. அதே சமயம் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படம் பெரிய வசூல் சாதனை நிகழ்த்த கதை முக்கியமில்லை ரசிகர்கள் பட்டாளம் இருந்தால் போதும் என்ற நிலை தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, அவரின் ரசிகர்கள் படம் சரியில்லை என்றாலும், புகழ்ந்து பேசுவதும், அந்த நடிகரின் போட்டி நடிகராக இருக்கம் நடிகரின் ரசிகர்கள் படம் நன்றாக இருந்தாலும், சரியில்லை என்று விமர்சிப்பதும் நடந்து வருகிறது. இப்படி ரசிகர்கள் வலைதளங்களில் சண்டை போட்டாலே அந்த படத்திற்கு பெரிய ப்ரமோஷனாக அமைந்து அதிக வசூல் செய்த படமாக மாறிவிடுவது தான் இன்றைய ட்ரெண்ட்.
அந்த வரிசையில் முதலில் இடம் பிடித்தது என்றால் விஜய் – அஜித் இருவரையும் சொல்லலாம். இருவருக்கும் இடையே நேருங்கிய நட்பு இருக்கிறது என்ற தகவல் வெளியானாலும், அவர்களுக்கு இடையே பொறாமை இருக்கிறது என்று ஒரு இசையமைப்பாளர் கூறிய தகவலின் மூலம் வெளியாகி இருக்கிறது. சரண் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் அட்டகாசம். அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் ‘’உனக்கென்ன உனக்கென்ன’’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த பாடலை விஜய்க்கு எதிராக இருக்க வேண்டும் என்று அஜித் கேட்டு வாங்கியதாக அப்படத்தின் இசையமைப்பாளர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இந்த பாடலை வைரமுத்து எழுதியிருந்தார், இன்றைய காலக்கட்டத்தில் அந்த பாடல் வந்திருந்தால், கடுமையாக விமர்சித்திருப்பார்கள். ஆனால் சமூகவலைதளங்கள் அதிகம் பயன்படுத்தாத காலக்கட்டத்தில் வந்ததால் அதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று பரத்வாஜ் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் கொடுத்த இன்டர்வியூவில் தெரிவித்துள்ளார்.
இந்த பாடலில் அனைத்து வரிகளுமே விஜய்க்கு எதிராக அமைந்திருக்கும். குறிப்பாக ‘’ஏற்றிவிட தந்தை இல்லை என்னை நானே சிகரத்தில் வைத்தேன் அதனால் உனக்கென்ன’’ என்ற வரிகள் விஜயை நேரடியாக தாக்குவது தெரியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.