/indian-express-tamil/media/media_files/2025/08/24/deva-ilayaraja-2025-08-24-15-24-14.jpg)
தனது பாடல்களுக்கு இளையராஜா காப்பரிமை கேட்பது போல் தேவா கேட்பதில்லை என்ற சமூகவலைதளங்களில் பேச்சு அதிகம் எழுந்து வரும் நிலையில், இந்த கேள்வியை இளையராஜாவிடம் கேட்ட செய்தியாளருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இசையமைப்பாளர் தேவா ஒர நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
70-களின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தமிழ் சினிமாவில் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் இளையராஜா. அன்னக்கிளி படம் தொடங்கி அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், ஓடாத கதையையும் தனது இசையால் ஒட வைப்பார் என்ற பெருமையை பெற்றுள்ளார். 80-களில் இளையராஜா இசை இருந்தாலும் போதும் படம் ஹிட்டாகிவிடும் என்ற நிலை இருந்தது. அதற்கு ஏற்றார்போல், தனது பாடல்கள் மூலமாகவே பல படங்களை ஓட வைத்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு.
பல புதுமுக இயக்குனர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ள இளையராஜா, முதல் படம் இயக்கும் இயக்குனர்களுக்கு சம்பளம் வாங்காமல் இசை அமைத்து கொடுத்ததாக பலர் இன்றைக்கு யூடியூப் சேனல்களில் பேசி வருகின்றனர். தற்போது 75 வயதை கடந்தவராக இருந்தாலும், இன்றைக்கும் இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக வலம் வரும் இளையாஜா, ஒரு விஷயத்தில் மட்டும் கண்டிப்புடன் இருந்து வருகிறார். அது தான் பாடல் காப்புரிமை விவகாரம். தனது பாடல்களை சினிமாவில் மற்றவர்கள் பயன்படுத்த இளையராஜா அனுமதிப்பதில்லை.
தனது அனுமதி இல்லால் தனது பாடல்கள் மற்றும் இசையை, படங்களில் பயன்படுத்தினால் அதற்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்துவிடுவார். ரஜினியின் கூலி பட டீசர் வரும்போதுகூட தனது இசையை பயன்படுத்தியதாக வழக்கு தொடர்ந்த இளையராஜா, மலையாளத்தில் வெளியான மஞ்சுமல்பாய்ஸ் படத்தில் இடம் பெற்ற குணா திரைப்படம், வனிதாவின் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இடம் பெற்ற சிவராத்திரி உள்ளிட்ட பல பாடல்களுக்கு எதிராக வழக்க தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது கடுமையான விமர்சனங்களும் இருந்து வருகிறது.
“அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்”
— Maathevan (@Maathevan) August 23, 2025
- இசையமைப்பாளர் தேவா pic.twitter.com/pI3gZWCf12
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்பானி இசைக்காக லண்டன் சென்ற இளையராஜாவிடம் ஒரு பத்திரிக்கையாளர் இசையமைப்பாளர் தேவா தனது பாடலுக்கு காப்புரிமை கேட்பதில்லையே என்று இளையராஜாவிடம் கேட்டுள்ளார். இதற்காக வருத்தம் தெரிவித்த தேவா, இளையராஜா எனக்க குரு மாதிரி, அவர் பெரிய லெஜண்ட். அவர் பெரிய சக்சஸ் பண்ண வேண்டும் என்ற லண்டன் போகிறார். அவரிடம்போய் தேவா ராயல்டி கேட்பதில்லை என்று சொல்கிறார். அந்த பத்திரிக்கையாளருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தேவா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.