/indian-express-tamil/media/media_files/2025/09/05/deva-movie-2025-09-05-18-34-46.jpg)
தமிழ் சினிமாவில் தனது இசையால் பலரின் மனதை வென்ற, இசையமைப்பாளர் தேவா திரைப்படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ஒருசிலர் கூறுவார்கள். இதற்கு தற்போது தேவாவே ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்,
1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. தொடர்ந்து 1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகராசா படத்தின் மூலம் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வளர்ந்த இவர், அடுத்து தனது 3-வது படமாக வைகாசி பொறந்தாச்சு படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்றைக்கும் இளைஞர்களை துள்ளி விளையாட வைக்கும் அளவுக்கு பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா, சரத்குமாருக்கு சூரியன், வேடன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள தேவா, இன்றைக்கும், இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். பாட்ஷா படம் பார்க்கும்போது எனக்கு அவ்வளவாக திருப்தி இல்லை. ஆனால் அந்த படத்தை தனது இசையால் தூக்கி நிறுத்தியவர் தான் தேவா என்று நடிகர் ரஜினிகாந்த் பல மேடைகளில் கூறியுள்ளார். அந்த அளவிற்கு, தேவா இசையில், அசத்திய பல படங்கள் உள்ளன.
இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் இருக்கும் தேவா, ஒரு சில படங்களில் இசைமைப்பாளர் தேவாவாகவே வந்து நடித்திருப்பார். ஆனால் இவரை திரைப்படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று பல முயற்சிகள் நடந்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான தனுஷின் ராயன் படத்தில் கூட, இவரை வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்க தனுஷ் கேட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தேவா, மீசைய முறுக்கு 2 படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாக தேவா கூறியுள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மீசைய முறுக்கு பார்ட் 2 கதை சொன்னாங்க, அற்புதமான கதை. இதில் நீங்கள் தான் தாதா என்று சொன்னாங்க. நான் தாதாவா? அப்படி ஒரு கதை. ஆனால் இந்த படத்தை நான் வேண்டாம் என்று சொன்னதற்கு முக்கிய காரணம் என்ன என்றால், நான் இப்போது கான்சர்ட்டில் பிஸியாக இருக்கிறேன். ஒரு வாரம் சென்னை, அடுத்த வாரம் பாரிஸ், ஜப்பான் போய்க்கிட்டு இருக்கேன். இந்த நேரத்தில் சரியாக அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது. சரியான நேரத்திற்கு ஷூட்டிங் போக முடியாது.
I was approached to do a villain role in #MeesayaMurukku2. I didnt accept the offer as i was busy with concerts and honestly speaking i’m not a professional actor.
— Kolly Buzz (@KollyBuzz) September 4, 2025
- Music Director Deva pic.twitter.com/2DZypu6xtr
இன்னொரு விஷயம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு நடிக்க தெரியாது. ஸ்கிரிப்டை மனப்பாடம் பண்ணி வைத்துக்கொண்டு சொல்லனும், நடிக்கும்போது டைலாக்கை மிஸ் பண்ணிடுவேன். கூட நடிக்கும் நடிகர்கள் டிஸ்டர்ப் ஆவார்கள் என்று தேவா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.