தென்னிந்திய சினிமாவில் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருபவர் சத்யராஜ். அடியாளாக அறிமுகமாகி வில்லன் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்த இவர், பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள சத்யராஜ், பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
Advertisment
அதேபோல் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ள சத்யராஜ், மணிவண்ணனுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்று வருகிறது. நக்கல் நய்யாண்டிக்கு பெயர் பெற்ற சத்யராஜ், படங்களில் மட்டுமல்லாமல் ரியல் லைபிலிலும் தனக்கான தனித்துவமாக நல்லலுடனே பேசி வருவார். அந்த வகையில் இவரின் நக்கல் நய்யாண்டியுள் வெளியான பல படங்கள் வரவேற்பை பெற்றுள்ளனது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அரசியல் நய்யாண்டியுடன் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான அமைதிப்படை திரைப்படம் இன்றும் தமிழில் சினிமாவின் முக்கிய அரசியல் படமாக பார்க்கப்படுகிறது. இக்கால அரசியலை 90-களிலேயோ சொல்லிவிட்டதால், இப்போது வரும் அரசியல் படங்கள் அமைதிபடை படத்தை ரெப்ரன்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளது. அதேபோல் தற்போது சத்யராஜ் பல மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சத்யராஜ் - இசையமைப்பாளர் தேவா
Advertisment
Advertisements
பொதுவாக சக தனக்கே உரிதான பாணியில் காமெடியாக பேசும் சத்யராஜ் குறித்து இசையமைப்பாளர் தேவா சுவாரஸ்யமாக நிகழ்வை பகிர்ந்துகொண்டுள்ளார். தனது இசையால் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள தேவா ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் தேவா.
தொடர்ந்து வைகாசி பொறந்தாச்சு, அண்ணாமலை, பாட்ஷா, உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தனது குரலால் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற தேவா பல சுவாரஸ்யமாக நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். அதில், சத்யராஜ் குறித்து பேசிய, தேவா சார் நீங்கள் என்னை நினைத்துக்கொண்டு பாட்டு போடாதீங்க சார் அஜித் குமாரை நினைத்துக்கொண்டு பாட்டு போடுங்க அப்படிதான் சொல்வார்.
அதேபோல் மன்மதராசா பாடல் வந்தபோது தேவா சார் இதே மாதிரி எனக்கு ஒரு பாட்டு போடுங்கனு கேட்டுக்கிட்டார். அவரை நான் பார்த்தேன். அதற்கு அவர் ஏன் அப்படி பாக்குறீங்க அதே மாதிரி ஆட மாட்டேனு பாக்குறீங்களா என்று கேட்டார். அதன்பிறகு தான் சத்யராஜ் நடிப்பில் வெளியான அடிதடி படத்தில் உம்மா உம்மமம்மா பாடல் போட்டேன் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“