கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கனகா இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை அவரை பார்கணும்போல இருக்கு என்று இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் உருக்கமாக பேசியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில், இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் கங்கை அமரன். 1982-ம் ஆண்டு பிரபு, சுரேஷ் நடிப்பில் வெளியான கோழி கூவுது என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கங்கை அமரன் தொடர்ந்து, கொக்கரக்கோ, வெள்ளை புறா ஒன்று, எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
குறிப்பாக இவர் 1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை பெற்றவர். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த தேவிகாவின் மகளாக இவர், சினிமாவில் வரவேண்டாம் என்று இருந்தவர் நடிகை தேவிகா.
இந்த நிலையில், தனது கரகாட்டக்காரன் படத்தின் நாயகிக்காக பல புதுமுக நடிகைகளை பரிசோதித்த கங்கை அமரனுக்கு திருப்தி இல்லாத நிலையில், தனது வீட்டு விஷேஷத்திற்கு தனது மகள் கனகாவுடன் வந்த தேவிகாவிடம் உங்களது மகளை என் படத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டுள்ளார். இதை கேட்டு முதலில் மறுத்த தேவிகா பிறகு மனமில்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார்.
Advertisment
Advertisements
அதன்பிறகு கரகாட்டக்காரன் படம் தொடங்கியது. இந்த படம் தோல்வியை சந்திக்கும். அல்லது சுமாரான வெற்றியை பெறும் என்று நினைத்துக்கொண்ருந்த தேவிகாவுக்கு கரகாட்டக்காரன் படத்தின் வெற்றி பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. அதோடு மட்டுமல்லாமல் கனகாவுக்கும் இதுதான் முதல் படமா என்று பலரும் கேட்கும் அளவுக்கு அவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்ற நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
இந்த படத்தை தொடர்ந்து, கார்த்திக், ரஜினிகாந்த், விஜயகாந்த், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த கனகா, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். பிஸியாக நடித்து வந்த கனகாவுக்கு ஒரு கட்டத்தில் அவரது தாயின் மரணம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது. அதன்பிறகு ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக சினிமாவில் இருந்து விலகி தற்போது தனியாக வசித்து வருகிறார்.
கங்கை அமரன் - கனகா
தற்போது கனகா குறித்து பேசியுள்ள அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் கங்கை அமரன், அவரது வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்துள்ளது. அவரது எண்ணம் முழுவதும் அதில் தான் இருக்கிறது. அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த தோல்விதான் தனக்கு யாரும் வேண்டாம் என்று அவர் தனிமையில் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு காரணமாக இருக்கிறது. எனக்கு கனகாவை பார்க்க வேண்டும் என்று ஆசை. இந்த நேரத்தில் தான் ஆதரவாக இருக்க வேண்டும்.
ஆனால் அவர் அதை விரும்ப மாட்டார். இந்த பேட்டியை பார்த்தாவது அவர் என்னை அழைக்க வேண்டும்.வீட்டின் கதவை பூட்விட்டார். யாரும் உள்ளே போக முடியவில்லை. யார் சென்றாலும் அவருக்கு தெரியாது சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை.வீட்டிற்குள் எப்படி போவது என்று தெரியவில்லை. எதற்காக ஒரு பெண் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அவரை எப்படி சரி செய்ய போகிறோம் என்று தெரியவில்லை. பேசாமல் என்னை பார்சல் செய்து அவரது வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“