/indian-express-tamil/media/media_files/2025/08/14/gangai-amaran-2025-08-14-20-22-12.jpg)
தமிழ் சினிமாவில் இளையராஜா இசையில் உச்சம் தொட்டார் என்றால், அவரது தம்பி, இசை, இயக்கம், பாடல்கள், தயாரிப்பு என பல துறைகளில் தன்னை நிரூபித்துள்ளார். தனது அண்ணன் இளையராஜாவின் இசையில் பல பாடல்களை எழுதியுள்ள கங்கை அமரன் 10 வருடங்களாக அண்ணனிடம் பேசுவதில்லை என்று உண்மையை நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், அண்ணனுக்கும் எனக்கு சண்டை வந்திருக்கிறது., சில இடங்களில் வெளிப்படையாக திட்டிவிடுவேன். அதனால் என்னை விட்டுவிட்டார். நான் அவரிடம் 10 வருடமாக பேசுவதே இல்லை. நான் அவருக்கு பாடல் எழுதியதில்லை. அந்த நேரத்தில் தான் வைரமுத்து இடத்தை பிடித்துவிட்டார். வைரமுத்து வந்தவுடன் எனக்கு சந்தர்ப்பங்கள் குறைய ஆரம்பித்தது. என் புத்தகம் ஒன்று ஜனவரி மாதம் வெளியாகிறது. ஹிந்து பத்திரிகையில் வெளியிடுகிறார்கள்.
என் திரைப்படப் பாடல்களில் மட்டும். இதுவரைக்கும் என் கையில் கிடைத்திருக்கிறது 1200 பாடல் கிடைத்திருக்கிறது. அனைத்தற்கும் இளையராஜா இசை தான். அதே சமயம் வைரமுத்து வரவில்லை எ்னறால் எனக்கு எவ்வளவு பாட்டு கிடைத்திருக்கும்? நன்றாக யோசித்து பாருங்கள். அது நல்ல விஷயம் தான். புதியவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் வந்தவுடன், நான் வந்த பின்னால் தான் அவருக்கு முகவரி தெரிய ஆரம்பித்தது என்று சொல்கிறார்கள்.
அவர் எப்போது அவ்வாறு பேச தொடங்கினாரோ அப்போதே என் மனதில் பட்டது. ஆனால் யாரையும் காட்டி கொடுக்கும் வேலையை செய்ய கூடாது. அவன் பாடல் எழுதுவது உனக்கு பிடிக்கவில்லை. அதுக்குத்தான் இப்படி சொல்கிறேன் என்று சொல்வார்கள் என்பதால் விட்டுவிட்டேன். அது அவருக்கே தெரியவில்லை. இது தான் காரணம். பல இடங்களில் போய் இளையராஜா என்ற ஒரு இசையமைப்பாளன் வளர்ந்து வருகிறான் அதற்கு என் பாடல்களின் அடையாளம் பெரியதாக வந்திருக்க முடியாது.
இதுவரை 3-4 கல்லூரிகளில் இதை பேசிவிட்டார். இது பற்றி அண்ணன் இதுவரைக்கும் சொல்லவே இல்லை. ஆனால். நான் சொல்கிறேன் வைரமுத்தும் இளையராஜா ஏன் சேரவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அவர் தன்னை தானே உயர்த்திக்கொண்டு பேசுகிறார். இன்று ராமர் பற்றி பேசுகிறார். அன்று ஆண்டாள் பற்றி பேசினார். எல்லாம் மாற்று கருத்தா பேசினால் தான் பாப்புலர் ஆக முடியும் என்று நினைக்கிறார். எம்.ஆர்.ராதா சரியாக பேசினார். எம்.ஆர். ராதா பேசினால் நல்ல நியாயமாக இருக்கும். அந்த மாதிரி இயல்பில் யாருமே இல்லை.
கண்ணதாசனை அப்படித்தான் பேசினார். நான் செல்லும் போது அப்படித்தான் பேசினார். கவிஞராக இருப்பவருக்கு எல்லா உணர்ச்சிகளும் அடக்கிக்கொண்டு, மென்மையாக பேசுவது தான் கவிஞரின் பண்பாடு.. நான் வைரமுத்து பற்றி திட்ட வில்லை. இளையராஜா மற்றும் வைரமுத்து ஏன் பிரிந்து என்ற கேள்வி இருக்கிறது. அதற்கான பதில் தான் சொல்கிறேன். தனிதானே உயர்த்துக்கொண்டு, நான் வந்த பிறகு தான் இளையராஜாவுக்கு அடையாளம் வந்தது என்ற சொல்கிறார். அதுக்கு முன்னால் வந்த அடையாளம் எப்படி? நான் கஷ்டப்பட்டு வந்தேன் என்று கூறியள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.