இண்டிபெண்டன்ட் மியூசிக் ("independent music") என்னும் சுதந்திரமான இசை அமைப்பு ஆல்பங்களை நிறுத்திக் கொண்டது ஏன் என்பது குறித்து பேசிய ஹிப் ஹாப் தமிழா ஆதி, இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பதற்கு கலை புதிய பாதையை ஏற்படுத்தி கொடுக்கும் - ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் அதற்கான விழிப்புணர்வை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஆதி செய்தியாளர்களை சந்தித்தார். தான் நடத்தவிருக்கும் இசை நிகழ்ச்சி (CONCERT) குறித்து பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்ட அவர், 2018"ஆம் ஆண்டுக்கு பிறகு "independent music" என்னும் சுதந்திரமான இசை அமைப்பு ஆல்பங்களை நிறுத்திக் கொண்டது என் என்பது குறித்து பேசினார்.
அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வாய்ப்புகள் உருவாக வேண்டும் என்பதற்காகவே அந்த வகை பாடல்கள் வெளியிடுவதை நிறுத்தி விட்டோம். வருங்கால இளைஞர்களுக்கு பாலமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை அடைத்துக் கொண்டு இருக்க வேண்டாம் என்பதற்காக நிறுத்திவிட்டோம். இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பது ஒட்டுமொத்த சமுதாயத்தின் கையில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரது கையிலும் இருக்கிறது.
கலை மூலமாக அதற்கான விழிப்புணர்வை தொடர்ந்து செய்வோம் சமீபத்தில் தன்னை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என நினைத்துக் கொண்டு ஒருவர் வாழ்த்து கூறியது பெருமையாக இருந்தது. பின்னர் அந்த ரசிகர்களிடம் தான் ரோகித் சர்மா இல்லை எனக் கூறி விட்டு வந்தேன். இது தொடர்பாக எனது நண்பர்களும் என்னை கிண்டல் செய்தனர் என்று ஆதி கூறியுள்ளார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“