இந்திய சினிமாவில் பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தமிழில் இளையராஜா இசையில் பல பாடல்களை பாடியிருந்தாலும் ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு படங்களில் பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், 1969-ம் ஆண்டு வெளியான எம்ஜி.ஆர்-ரின் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் எம்.ஜி.ஆர்-ரின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் வெற்றிப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் தனது குரல் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எஸ்.பி.பி பல ஆண்டுகளாக ரஜினி படத்தில் ஓப்பனிங் பாடலை பாடியிருந்தார். அதேபோல் இளையராஜா இசையில் பல பாடல்களை பாடியிருந்தாலும், எஸ்.பி.பி பாடிய ஒரு பாடலுக்கு மட்டும் இளையராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் பேசியுள்ள இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் எனது இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். ஆனால் நான் அவரை நல்லா பாடியிருக்க என்று ஒரு பாடலுக்கு கூட சொன்னதே இல்லை. ஆனால் பல ஹிட் பாடல்களை நன்றாக பாடியிருக்கிறார். வருவார் பாடல் பாடுவார் சென்றுவிடுவார் மற்ற எதை பற்றியும் எடுத்துக்கொள்ள மாட்டார்.
ஒரு பாட்டு கூட நல்லா பாடியிருக்க என்று நான் சொன்னது இல்லை. ஒருமுறை தெலுங்கு படத்திற்காக ஒரு பாடலை எழுதி இசையமைத்து நான் பாடியிருந்தேன். அந்த பாடலை அவர் தான் பாட வேண்டும். அந்த பாடல் ரெக்கார்டு பண்றப்போ அந்த பாடலை அவருக்கு சொல்லிக்கொடுக்க என்னால் முடியவில்லை. கேசட்டை கையில் கொடுத்து இதை அப்படியே காப்பி அடித்துவிடு என்று சொன்னேன்.
அவரும் சிறப்பாக பாடியிருந்தார். அந்த பாடல் மிகவும் அமேசிங். எஸ்.பி.பி.-யை தவிர வேறு யாராலும் அந்த பாடலை பாடியிருக்க முடியாது. நான் என்ன பாடியிருந்தேனே அதை அப்படியே பாடியிருந்தார். அன்று தான் நான் அவரை மனம் திறந்து ரொம்ப நல்லா பாடியிருக்க நீ என் சொன்னேன் என இளையராஜா கூறியுள்ளார். ஆனால் அவர் பாடிய அந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“