வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், பங்கேற்ற இளையராஜா, சூரியை கலாய்த்து தள்ளிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன், மஞ்சுவாரியார், கிஷோர் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
வரும் டிசம்பர் 20-ந் தேதி வெளியாக உள்ள விடுதலை 2 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் நேற்று (நவம்பர் 26) வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஏற்கனவே வெளியான தினம் தினம் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
விடுதலை 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறந்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா, பேசும்போது, சூரியிடம் நீங்கள் கூட்டி வந்த ஆட்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்ல, இல்லை அய்யா நீங்கள் பேசும்போது உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அமைதியாக இருக்கிறார்கள் என்று சூரி பதில் அளித்துள்ளார். அதன்பிறகு, நீங்கள் ஹீரோவா எத்தனை படங்களில் நடித்து வருகிறீர்கள் என்று இளையராஜா கேட்கிறார்.
Advertisment
Advertisements
இப்போது 2 படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருவதாக சூரி சொல்ல, உங்களை முதன் முதலில் கதையின் நாயகனாக மாற்றியவர் வெற்றிமாறன். இதற்கு முன்பு கமெடி நடிகராக நடித்த நீங்கள், கதையின் நாயகனாக நடித்து வரும் 2 படங்களிலும் காமெடியனா ஹீரோவா என்று கேட்க, சூரி பதில் சொல்ல முடியாமல் சிரித்து விடுகிறார். அதன்பிறகு விஜய் சேதுபதி பேச, நான் ஆட்களை கூட்டி வரவில்லை என்று சொல்கிறார். அதை கேட்ட இளையராஜா சூரி ஆட்களை கூட்டி வந்ததை நீங்கள் தானே சொன்னீங்க என்று கேட்கிறார்.
அதற்கு விஜய் சேதுபதி ஆமா அய்யா நான் தான் சொன்னேன். ஆனால் நான் ஆட்களை கூட்டி வரவில்லை என்று சொல்கிறார். உங்கள் ரெண்டு பேர் பெயரை சொன்னாலே கைத்தட்டல்கள் பறக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறீர்கள் என்றுளு இளையராஜா கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“