இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகமான முதல் படமாக அன்னக்கிளி படத்தில் இடம்பெற்ற மச்சா பாத்தீங்களா என்ற பாடல் உருவான விதம் குறித்து அவர் ஒரு மேடையில் கூறிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. 80-90 களில் தமிழ் சினிமாவில், பல படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்த இவர், 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. ஆனாலும், படம் வெளியான புதிதில் இந்த படத்திற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை.
ஒரு சில நாட்கள் கழித்து இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்ததை தொடர்ந்து, படத்திற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவை கொடுத்திருந்தனர். 45 வருடங்களுக்கு மேல் கடந்திருந்தாலும், இப்போதும் அன்னக்கிளி படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இளையராஜாவின் பின்னணி இசையும், அதில் செய்த புதுமையும் தான்.
இது குறித்து பல மேடை கச்சேரிகளில் பேசியுள்ள இளையராஜா இந்த படத்தில் இடம்பெற்ற 'மச்சான பார்த்தீங்களா' என்ற பாடல் ஒருவான விதம் குறித்து பேசியுள்ளார். முதலில் க்ளாசிக்கல் கிட்டாரில் ஒரு டியூனை உருவாக்கினேன். கஷ்டப்பட்டு அதை பயிற்சி செய்தேன். இதை வாசிக்கும்போது இதே மாதிரியான ஒரு இசையை கம்போஸ் செய்தால் என்ன என்று தோன்றியது. அதன்பிறகு அதையும் கம்போஸ் செய்தேன்.
அப்போது இதை கிராமத்து பின்னணியில், ஃபோக் இசையாக மாற்றலாமா என்று யோசித்து அதையும் செய்தேன். அந்த பாடல் தான் மச்சான பாத்தீங்களா என்ற பாடல் என்று இளையராஜா கூறியுள்ளார். எஸ்.ஜானகி பாடிய இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“