தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா, கமல்ஹாசன் நடித்த ஒரு படத்திற்கு, அனைத்து பாடல்களையும் அவரே முடிவு செய்த நிலையில், இதை மாற்ற நினைத்த கமல்ஹாசன், கவிஞர் வாலியை கடத்தி சென்றுள்ளார்.
1976-ம் ஆண்டு தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல், பல புதுமுக தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. இன்றைய காலக்கட்டத்தில் பல இளம் இசையமைப்பாளர்கள் வந்துவிட்டாலும், இளையராஜா அவருக்கு போட்டியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்
மேலும் அவ்வப்போது இசை நிகழ்ச்சி நடத்தி ரசிகர்களை மகிழ்வித்து வரும் இளையராஜா, சமீபத்தில் கும்பகோணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு பாடல் உருவான விதம் குறித்து கூறியுள்ளார். 1989-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படம் அபூர்வ சகோதரர்கள். கமல்ஹாசன் 3 கோரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞர் வாலி பாடல்கள் எழுதியிருந்தார்.
படத்தில் அனைத்து பாடல்களையுமே இளையராஜா ஓகே செய்தபிறகுதான் பாடல் பதிவு நடைபெறும். இதை கவனித்த கமல்ஹாசன், என்ன இவரே அனைத்து பாடல்களையும் ஓகே செய்கிறார் என்று நினைத்து, கவிஞர் வாலியை கடத்திக்கொண்டு போயுள்ளார் கமல்ஹாசன். 3 நாட்கள் கழித்து 4 பல்லி 8 சரணத்துடன் இருவரும் திரும்பி வந்தார்கள். வாலி தனது பாக்கெட்டில் இருந்து பாடலை எடுத்து போட்டுள்ளார். அதை பார்த்தால் அந்த டியூனுக்கான பல்லவி இருந்துள்ளது.
நான் டியூனை ஓப்பனாக போட்டிருந்தேன். ஆனால் அவர் எழுதிக்கொண்டு வந்த பல்லவி, இறுதியில் முடிவது போல் இருந்துது. இதனால் இந்த இறுதி வார்த்தையை மட்டும் நான் நீளமாக பாடுவது போன்று மாற்றியுள்ளார். ‘’ராஜா கைய வச்சா’’ என்று சொல்ல, வாலியும் கமல்ஹாசனும் அதையே வைத்துக்கொள் என்று கூறியுள்ளார். ஆனால் இளையராஜா, ராஜா என்று வருவதால், நீங்கள் இதை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட வாலி, ஏற்கனவே பாப்புலர் ஆகியிருக்கும் பெயரை பயன்படுத்தலான நான் வேஸ்ட்யா, ராஜா நீ பாப்புலர் ஆகிட்ட, ராஜா கைய வச்சானு வை நல்லாருக்கும் என்று கூறியுள்ளார்.
பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்கமுடியாது. நன்றி! 🙏 இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும் pic.twitter.com/MlRvizySkP
— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 24, 2024
அதன்பிறகு தான் இந்த பாடல் உருவாகியுள்ளது. ‘ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லே’’ என்ற அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.