பாடல்கள் காப்புரிமை தொடர்பான வழக்கு விசாரணையில், இளையராஜா அனைவருக்கும் மேலானவர் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. இசைஞானி, மாஸ்ரோ என இவருக்கு பல பட்டங்கள் கொடுத்து ரசிகர்கள் அழைத்து வரும் நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இளையராஜா பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அந்த வகையில், இவர் இசையமைத்த பாடல்கள் காப்புரிமை தொடர்பான வழக்கில், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.
இளையராஜா இசையமைப்பில் வெளியான சுமார் 4500 பாடல்களை பயன்படுத்திக்கொள்ள எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்தபின்னரும் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தனி நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறது என்று கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இசையமைப்பாளர் இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார்.
இளையராஜாவின் மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே தாயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்றுள்ளதால் பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு உரிமை உள்ளதாக எக்கோ நிறுவனம் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட படத்திற்காக தயாரிப்பாளரிடம் சம்பளம் பெறும் இசையமைப்பாளருக்கு ராயல்டி தவிர மற்ற அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டதாக எக்கோ நிறுவனம் கூறியிருந்தது.
மேலும் இளையராஜாவுக்கு இதில் உரிமை இருக்கிறதா என்பது இறுதி விசாரணையின் முடிவில் முடிவு செய்ய முடியும். 1970-80-90களில் இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பு இருந்துது. ஆனால் தற்போது அந்த ஈர்ப்பு இல்லை. அதேபோல் ஸ்பாட்டிஃபை நிறுவனத்தின் மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தின் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் எக்கோ நிறுவனம் வலிறுத்திய நிலையில், இசையமைப்பாளருக்கு எதிராக அவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று இளையராஜா தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
அப்போர் இசை நிறுவனத்தில் வழக்கறிஞர் இளையராஜா தன்னை எல்லோருக்கும் மேலானவர் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்று சொல்ல, ஆமாம் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் தான் என்று அவரின் வழக்கறிஞர் கூறிய நிலையில், வீம்புக்காக இதை சொல்வதாக நினைக்க வேண்டாம் என்று கூறியள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கை ஏப்ரல் 16-ந் தேதிக்கு ஒத்திவைத்த நிலையில்,இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil