New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/11/ilayaraja-1200.jpg)
சமீபத்தில் காசியில் தொடங்கிய தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தனது இசையால் பிரதமர் மோடியை வியக்க வைத்தவர் இளையராஜா.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இவர் தற்போதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். மேலும் சாதாரண கதையாக இருந்தாலும் அதை தனது இசையால் வெற்றிப்படமாக மாற்றிய பெருமை இளையராஜாவுக்கு உண்டு.
சிவக்குமார் தொடங்கி ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் சரத்குமார் உள்ளிட்ட மூத்த நடிகர் மட்டுமல்லாமல் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் இசையமைத்து வரும் இளையராஜா தற்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன், விஷாலின் துப்பறிவாளன் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் சமீபத்தில் காசியில் தொடங்கிய தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தனது இசையால் பிரதமர் மோடியை வியக்க வைத்தவர் இளையராஜா.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜா குறித்து புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஒரு சிறுவனை மடியில் அமர வைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த சிறுவன் யார் என்று பரபரப்பான கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் என்பது தெரியவந்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே கொலைவெறி பாடல் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து விஜய் அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னிணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், கமல் நடிப்பில் இந்தியன் 2, ஷாருக்கான நடிப்பில் ஜவான் என திரைத்துறை ஜாம்பவான்களின் படங்களுக்கு அனிருத இசையமைத்து வருகிறார். மேலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.