தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களுக்கு இசையமைத்தபோது ஒரு பாடலால் வந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
க்ளாசிக் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்த எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகியோருக்கு தனது இசையின் மூலம் பல வெற்றிகளை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அதேபோல் ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதில் எம்.ஜி.ஆரின் ஒளி விளக்கு மற்றும் சிவாஜியின் லட்சுமி கல்யாணம் ஆகிய படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்தபோது நடந்த சுவாரஸ்யமாக அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படம் ஒளி விளக்கு. இந்த படத்திற்கு இசையமைத்தபோது டியூன் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் நாள் ஆபீஸ் போக லேட் ஆகிவிட்டது, பாடலாசிரியர் வாலி முன்பே சென்றுவிட்டார். அப்போர் ஒளி விளக்கு ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர் வாலியை அழைத்து விஸ்வநாதன் என்ன பண்ணிட்டு இருக்கான் டியூன் ரெடி பண்ணிட்டானா பாட்டு ரெடியா என்று கேட்க, தைரியமாக சொல் நீ மனிதன் தானா என்று கூறிவிட்டார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் பாடல் வரி அருமையாக இருக்கிறதே என்று பாராட்டியுள்ளார். அதன்பிறகு நான் போனபோது வாலி அந்த பாடலை என்னிடம் சொன்னார். அந்த பாடல் வரியை கேட்ட நான் எனக்கு பிடிக்கவில்லை வரியை மாத்துங்க என்று சொன்னேன். ஆனால் எம்.ஜி.ஆர் பிடித்துவிட்டது என்று சொன்னார். அதனால் மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டார். கடைசி வரை நான் இந்த பாட்டுக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை.
கடைசியில் இந்த பாட்டு தான் படத்தில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பாட்டை நான் வேண்டாம் என்று சொன்னதுக்கு காரணம் சிவாஜியின் லட்சுமி கல்யாணம் படத்தில் யாரடா மனிதன் இங்கே என்று ஒரு பாடல் இருக்கிறது. இரண்டு படங்களுக்கும் நான் தான் மியூசிக். இரண்டு பாடல்களுக்கும் டிஎம்எஸ் தான் பாடுகிறார். முதலில் சிவாஜி படத்தில் பாடிவிட்டார். அடுத்து இந்த படத்தில் பாட வேண்டும்.
இதில் சிவாஜியின் லட்சுமி கல்யாணம் படத்தை கண்ணதாசன் தயாரித்து யாரடா மனிதன் இங்கே என்ற பாடலையும் அவர் எழுதியிருந்தார். நான் அவரிடம்போய் பாடலை மாற்றி தருமாறு கேட்டேன். அவரும் முடியாது என்று சொல்லிவிட்டார். அவரது காலில் கூட விழுந்தேன். ஆனால் பாடல் பதிவு செய்யப்பட்ட எல்லாம் முடிந்துவிட்டது இனி எப்படி மாற்ற முடியும் முடியாது என்று கண்ணதாசன் சொல்லிவிட்டார்.
இதனிடையே நான் தைரியமாக சொல் நீ மனிதன் தானா என்ற பாடலை வேண்டாம் என்று சொன்னது ஏன் என்று எம்.ஜி.ஆர் என்னை அழைத்து கேட்டார். அப்போது அவரிடம் லட்சுமி கல்யாணம் படம் பற்றி சொன்னேன். அதை கேட்ட எம்.ஜி.ஆர் இதை பற்றி யார் உன்னிடம் கேட்டாலும் என்னை சொல் எந்த பிரச்னை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். அதன்பிறகு இரண்டு படங்களும் வெளியாகி பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்று எம்.எஸ்’வி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.