நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்கொலை குறித்து ஒரு பேட்டியில் விஜய் ஆண்டனி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், நடிகர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் இயக்குனர் எடிட்டர் என பன்முக திறமையுடன் வலம் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனி பெரிய விபத்தை சந்தித்திருந்தார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய் ஆண்டனிக்கு அவரது குடும்பத்தினர் மனைவி மகள் என அனைவரும் பக்கபலமாக இருந்தனர்.
இதனிடையே விஜய் ஆண்டனியின் 16-வது மகள் மீரா கடந்த செப்டம்பர் 16-ந் தேதி அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விபத்தில் சிக்கிய தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது கூட தனது அம்மாவுக்கு ஆறுதலாக இருந்த மீரா தற்போது தற்கொலை செய்துகொண்டது விஜய் ஆண்டனியின் குடும்பத்திரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவுமு் தகவல் வெளியானது.
இந்நிலையில், மீராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் நடிகர் விஜய் ஆண்டனி தற்கொலை குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டாலும் வாழ்க்கையில் தற்கொலை செய்து கொள்ளும் இந்த தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என்று விஜய் ஆண்டனி கூறயிருந்தார்.
வாழ்க்கை எவ்வளவு வேதனையானதாக இருந்தாலும், அல்லது நீங்கள் எவ்வளவு சிரமங்களை சந்திக்க நேரிட்டாலும், ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று யோசிக்க கூடாது. குழந்தைகளுக்கு மனவேதனையாக உள்ளது. எனக்கு ஏழு வயது மற்றும் என் சகோதரிக்கு ஐந்து வயது இருக்கும்போது என் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு என் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதையும், அவர் பட்ட கஷ்டங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.சிலருக்கு அவர்களின் நிதி நிலைமை காரணமாகவும், மற்றவர்கள் தாங்கள் நம்பவைத்து ஏமாந்துவிட்டதாக உணரும்போதும் இந்த எண்ணங்கள் தோன்றும்.
அதேபோல் குழந்தைகள் மத்தியில், படிப்பின் அழுத்தம் உள்ளது. பள்ளி முடிந்த உடனேயே அவர்களை டியூஷனுக்கு அனுப்புகிறார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் அவர்களுக்கு சிந்திக்க கூட நேரம் கொடுக்கவில்லை. தயவு செய்து அதை செய்யாதீர்கள். அவர்கள் சுதந்திரமாக இருக்க சிறிது நேரம் அனுமதியுங்கள். பெரியவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் செல்வம் மற்றும் வெற்றியின் மீது வெறித்தனமாக இருப்பதை விட தங்களைத் தாங்களே நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.