இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தன்மீது அவதூறு பரப்பி வரும் யூடியூப் சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த வாரம் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் டிக்கெட் இருந்தும் உட்கார இடமில்லை, பார்க்கிங் இல்லை, என்று கூறி பெரும் துயரத்தை சந்தித்தாக தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த இன்னல்கள் காரணமாக பலர் டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியாமல் திரும்பியதாக கூறி வரும் நிலையில், இந்த நிலைக்கு தானே பொறுப்பேற்றபதாகவும், தங்களிடம் டிக்கெட் இருந்தால் அதன் நகலை எனக்கு அனுப்புங்கள் எங்களது குழு அதற்கு தீர்வு சொல்வார்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார். ஆனாலும் ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சர்ச்சை குறித்து யூடியூப் சேனல்கள் பரபரப்பான செய்திகளை பதிவிட்டு வரும் நிலையில், இந்த இசை நிகழ்ச்சி விவகாரத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு தொடர்பு உள்ளதாக யூடியூப் சேனல் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிடும் யூடியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக விஜய் ஆண்டனி தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அது முற்றிலும் பொய்யே! pic.twitter.com/x7sRGOu4tu
— vijayantony (@vijayantony) September 15, 2023
“என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம். நான் இப்போது சிறு மன வேதனையுடன், இந்தக் கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி, யூடியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானையும் தொடர்புப்படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யே! அந்த யூடியூப் சேனல் மீது நான் மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மானநஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்” என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.