/indian-express-tamil/media/media_files/y1S7iK3EJwGMcnhvjo4h.jpg)
அஜித் - யுவன் சங்கர் ராஜா
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித் விரைவில் நலம் பெற வேண்டும் என்று தான் பிரார்த்திக்கிறேன் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அஜித் குமார் தனது அடுத்தக்கட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
Wishing Ajith sir a speedy recovery. Prayers!
— Raja yuvan (@thisisysr) March 8, 2024
இதனிடையே அஜித் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,சாதராண மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அஜித் சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாகவும், நாளை அல்லது அடுத்த நாள் அவர் டிஜ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர்
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 8, 2024
நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்.#Ajithkumar
இதனிடையே அஜித் விரைவில் நலம்பெற தான் பிரார்த்திக்கிறேன் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், அஜித் சார் வரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.