லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், அதே நாளில், ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தயாராகியுள்ள வார் 2 படமும் வெளியாக உள்ளதால் பாக்ஸ் ஆபீஸில் கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒருவர் இன்று அவருடைய படத்துடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு ஒளிந்துள்ளது. இப்போது 51 வயதாகும் ஹ்ரித்திக் ரோஷன், 74 வயதாகும் ரஜினிகாந்துக்கு எதிராகப் தனது படத்தை மோதவிட்டுள்ளார். ஆனால், 39 ஆண்டுகளுக்கு முன்பு, ஹிருத்திக் ரோஷன் ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர். இதனால் ஹிருத்திக் தனது குழந்தைப் பருவத்திலேயே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த ஒரு படத்தில்தான் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார். இப்போது 39 வருடங்களுக்குப் பிறகு, இருவரும் நேரடியாக ஒரு பாக்ஸ் ஆபீஸ் மோதலில் சந்திக்கின்றனர். கடந்த 1986-ம் ஆண்டு ரஜினிகாந்த் ஸ்ரீதேவி இணைந்து நடித்து இந்தியில் வெளியான பகவான் தாதா படத்தில், ஹ்ரித்திக் தனது 12 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/05/rajinikanth-war-2-2025-08-05-13-35-36.jpg)
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து அவர் நடித்த காட்சிகள் இருந்தன. இந்தப் படத்தை ஹிருத்திக்கின் தாத்தா ஜே.ஓம் பிரகாஷ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, ராகேஷ் ரோஷன், டேனி டென்சோங்பா, ஓம் பிரகாஷ், விஜய் காஷ்யப் போன்ற பல பிரபல நடிகர்களும் நடித்திருந்தனர். ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் தற்போது அவரது படம் வெளியாகும் அதே நாளில் தனது படத்தை ரிலீஸ் செய்யும் அளவுக்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார்.
ரஜினிகாந்தின் 'கூலி' மற்றும் ஹ்ரித்திக் ரோஷனின் 'வார் 2' ஆகிய இரண்டுமே மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள். 2025-ஆம் ஆண்டின் மட்டுமல்ல, இந்திய சினிமா வரலாற்றின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் மோதல்களில் இதுவும் ஒன்று. இந்த இரு சூப்பர் ஸ்டார்களின் மோதலில், பாக்ஸ் ஆபீஸில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.'கூலி' படத்தின் பட்ஜெட் 350 கோடி ரூபாய் என்றும், 'வார் 2' படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தம், கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய் இந்த இரண்டு படங்களின் மூலம் பாக்ஸ் ஆபீஸில் களத்தில் உள்ளது.
ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'வார் 2' திரைப்படத்தில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். அதேபோல் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில், நாகர்ஜூனா, உபேந்திரா, சவுபின், மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இரு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,