Advertisment
Presenting Partner
Desktop GIF

கூலி படப்பிடிப்பு தீவிரம்: ரஜினிகாந்த் பெயர் என்ன தெரியுமா? புதிய அப்டேட்!

மலையாள சினிமாவில் இருந்து சௌபின், கன்னட சினிமாவில் இருந்து உபேந்திரா, தெலுங்கில் இருந்து நாகர்ஜூனா ஆகியோர் கூலி படத்தில் இணைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
rajinikanth In Maya

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களாக அந்த படத்தில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் அவர்களின் கேரக்டர் பெயர் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில், கூலி என்ற படத்’தை இயக்கி வருகிறார். 40 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் நடிகர் சத்யராஜ் – ரஜினிகாந்த் கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

மேலும் மலையாள சினிமாவில் இருந்து சௌபின், கன்னட சினிமாவில் இருந்து உபேந்திரா, தெலுங்கில் இருந்து நாகர்ஜூனா ஆகியோர் கூலி படத்தில் இணைந்துள்ள நிலையில், தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதனிடையே கடந்த சில தினங்களாக இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் கேரக்டர் பெயர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. முன்னதாக சௌபின் தயால் என்ற கேரக்டரிலும், நாகர்ஜூனா சைமன் கேரக்டரிலும், ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கேரக்டரிலும், சத்யராஜ் ராஜசேகரன் என்ற கேரக்டரிலும், உபேந்திரா காலீஷா என்ற கேரக்டரிலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கேரக்டர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாவதற்கு 2 மணி நேரத்திற்கு முன், கூலி படத்தில் ரஜினிகாந்தின் பெயர் என்ன கெஸ் பண்ணலாமா என்று சன் பிச்சர்ஸ் சார்பில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் கேரக்டர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment