Coolie X review: முதல் பாதியை விட 2-ம் பாதி பெட்டர் - ஆவரேஜ் படமா கூலி? பேன்ஸ் ரிவ்யூ

ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பலரும் தங்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பலரும் தங்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coolie rajiniakth

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தான் இயக்கிய படங்கள் அனைத்தையும் வெற்றிப்படமாக மாற்றிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கியுள்ள படம் தான் கூலி. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான, அமீர்கான், நாகர்ஜூனா, சௌபின், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது,

Advertisment

சமீபத்தில் வெளியான படத்தில் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள மோனிகா பாடல், உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு கூலி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) வெளியாகியுள்ளது, படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமாக இருந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த படத்துடன் இந்தி படமான வார் 2 படமும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கூலி திரைப்படம் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அமெரிக்காவில், கூலி படம் இந்திய நேரப்படி காலை 4 மணிக்கு வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் கூலி படத்தின் சமூகவலைதள விமர்சனங்கள் குறித்து பார்ப்போம். 

"கூலி படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு சிறப்பாகவும், ஸ்டைலாகவும் உள்ளது. ஃபிளாஷ்பேக்கில் வரும் இளமையான ரஜினிகாந்தின் காட்சிகள் மாஸாக உள்ளன. ஷௌபின் ஷாஹிர் முழு நீள கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நாகார்ஜுனாவின் கதாபாத்திரம் ஸ்டைலாக இருந்தாலும், அது சரியாக வடிவமைக்கப்படவில்லை. 

Advertisment
Advertisements

ஸ்ருதிஹாசன் மற்றும் ரச்சிதா நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அனிருத்தின் இசை மிகப்பெரிய பலம். படத்தின் கதை பலவீனமாகவும், திரைக்கதை குழப்பமாகவும் உள்ளது. படம் முழுவதும் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் நன்றாக உள்ளன. கேமியோ கதாபாத்திரங்கள் படத்திற்குத் தேவையில்லாதது போலத் தெரிகிறது. மொத்தத்தில் இது ஒரு சராசரிப் படம்" என்று மூவி ரிவ்யூவர் கிறிஸ்டோபர் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"கூலி" திரைப்படம் சராசரியான படம். ஆனால், முதல் பாதி பரவாயில்லை. இரண்டாம் பாதி அதைவிடச் சிறப்பாக உள்ளது. இந்தப் படத்தில் நாம் பார்த்தது முற்றிலும் மாறுபட்ட ரஜினிகாந்தை. அனிருத்தின் இசை அருமையாக உள்ளது.

படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், சில காட்சிகள் மட்டுமே ரசிகர்களை ஈர்க்கின்றன" என்று எக்ஸ் பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நாகார்ஜுனா மற்றும் அமீர் கான் ஆகியோரின் கதாபாத்திரங்கள் சுமாராக இருந்ததாகவும், இது லோகேஷ் கனகராஜின் படங்களில் மிக பலவீனமான ஒன்று என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், கூலி தரமான செய்கை, விண்டேஜ் தலைவர் ஈஸ் பேக், லோகி இன்னும் தன்னை குற்ற செயல்களில் இருந்து ஒட்டிக்கொண்டு இருக்கிறார். மேன்ஷன் சண்டைக்காட்சி சூப்பர் என்று பதிவிட்டுள்ளார். 

மற்றொரு பயனர், உண்மையைச் சொன்னால், அந்த பரபரப்பு மட்டுமே நல்ல விஷயம். படம் பார்த்த பிறகு, எல்லா சக்தியும் வடிந்து போனது போல் இருந்தது.  பலவீனமான கதைக்களம், குளறுபடியான திரைக்கதை, எதிர்பார்ப்புகளுக்கு அருகில் எதுவும் இல்லை. மொத்த ஏமாற்றமும் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் திரைக்கதை, இசை, இயக்கம் கூட நடிப்புகள் பிரமிக்க வைக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பு சூப்பர். லோகேஷ் கனகராஜ், அருமையான வேலையை மிகவும் சிறப்பாகச் செய்தார். பெஸ்ட் ஆஃப் லக் கூலி டீம் என்று கூறியுள்ளார்.

கூலி படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளில் இடம்பெற்றடாப் ஸ்டார் பிரசாந்தின்கல்லூரி வாசல் படத்தின் லயோலா காலேஜ் லைலா பாடல் படத்தின் தீவிரத்தன்மையைக் கூட்டி, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

'கூலி' படம் குறித்த எக்ஸ் பயனர் தனது விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார். "லோகேஷின் மோசமான படைப்பு இது. முதல் பாதியில் உருவாக்கப்பட்ட கதை, இரண்டாம் பாதியில் வீணடிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் 'ஜெயிலர்' படத்தை நினைவூட்டுகிறது. படத்தின் சிறப்பம் அனிருத், சௌபின், நாகார்ஜுனாதான். அமீர் கானின் சிறப்புத் தோற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அனிருத் இல்லையென்றால், படம் முழுவதுமே ஏமாற்றம் அளித்திருக்கும்," என்று அவர் தெரிவித்துள்ளார். படம் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், சில விமர்சனங்கள் அமீர் கானின் சிறப்புத் தோற்றம் குறித்து கலவையான கருத்துகளைக் கொண்டுள்ளன.

Tamil Cinema News Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: