Advertisment

விஜய் ரசிகர்களை கவர்ந்த வானதி சீனிவாசன்: லியோ டிரெய்லர் குறித்து முக்கிய பதிவு

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது

author-image
WebDesk
New Update
Leo

வானதி சீனிவாசன்

நடிகர் விஜய் நடத்துள்ள லியோ திரைப்பட ட்ரெய்லரை தனது வீட்டில் பார்த்ததை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை திரிஷா உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவரது வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளார். இதன் புகைப்படத்தை வானதி சீனிவாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் LeoTrailer @Home.. என பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் இதற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanathi Srinivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment