சூப்பர் ஹீரோவாக மாறிய தல தோனி... வைரலாகும் மோஷன் போஸ்டர்

Tamil Cinema Update :தற்போது தோனி கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும அவரை பற்றிய தகவல்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது.

Tamil Cinema Update :தற்போது தோனி கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும அவரை பற்றிய தகவல்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
சூப்பர் ஹீரோவாக மாறிய தல தோனி... வைரலாகும் மோஷன் போஸ்டர்

MS Dhoni Updte In Tamil : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரா.ஃபிக் நாவலான அதர்வா தி ஆரிஜின் என்ற தொடரில நடிக்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான மோஷன் போஸ்டர் தற்போது வெளியிட்ப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் தோனி. ரசிகர்கள் மத்தியில் தல என்ற பெயர் பெற்றுள்ள இவர், ஐசிசி நடத்தும் 3வகை உலககோப்பையும் இந்தியாவுக்காக வென்று கொடுத்து பெருமைக்குரியவர். மேலும் இந்தியாவின் ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் இருந்து சென்னை அணிக்காக ஆடிவரும் இவர், இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும்போதே எம்எஸ் தோனி அன்டோல்டு ஸ்டோரி என்ற பெயரில் வெளியான இவரின் வாழ்க்கை வரலாறு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தோனி கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும அவரை பற்றிய தகவல்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது.

publive-image
Advertisment
Advertisements

அந்த வகையில் தற்போது தோனி நடிக்கும் கிரா.ஃபிக் நாவலான அதர்வா தி ஆரிஜின் என்ற தொடரின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோஸ் உருவாக்கியுள்ள இந்த போஸ்டரில்  தோனியை இதுவரை கண்டிராத வித்தியாசமான அவதாரத்தில் தோன்றியுள்ளார்.

காமிக் பிரியர்களுக்கும், தோனி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் வகையில், வரவிருக்கும் மெகா பட்ஜெட் கிராபிக் நாவலான ‘அதர்வா - தி ஆரிஜின்’ மோஷன் போஸ்டரில். தோனி சூப்பர் ஹீரோவாகவும் போர்வீரர் தலைவராகவும் வருகிறார். இந்த அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டரை எம்எஸ் தோனி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். மோஷன் போஸ்டரில் தோனியின் முரட்டுத்தனமான தோற்றம் உள்ளது,

ரிசிகர்களுக்கு ஒரு ஆழ்ந்த அனுபவத்தை வழங்கும் முயற்சியில், படைப்பாளிகள் அதர்வாவின் மாய உலகத்தை உருவாக்க பல ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் பணியாற்றினர். வித்தியாசமான பிரபஞ்சத்திற்கு வாசகர்களை டெலிபோர்ட் செய்யும் இந்த கிராஃபிக் நாவல், ரமேஷ் தமிழ்மணி எழுதியது, எம்.வி.எம். வேல் மோகன் தலைமையில், வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும்  அசோக் மேனர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.,

இது குறித்து பேசியுள்ள தோனி,, “இந்த திட்டத்துடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், உண்மையில் இது ஒரு அற்புதமான முயற்சியாகும். அதர்வா - தி ஆரிஜின் ஈர்க்கும் கதை மற்றும் அதிவேகமான கலைப்படைப்புகளுடன் வசீகரிக்கும் கிராஃபிக் நாவல். இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை சமகாலத் திருப்பத்துடன் வெளியிடும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி, ஒவ்வொரு ரசிகருக்கும் மேலும் பலவற்றைத் தேடித் தரும்.

publive-image

தொடர்ந்து, எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணி, கூறுகையில், “அதர்வா - தோற்றம் ஒரு கனவுத் திட்டம் மற்றும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று. ஒரு பார்வை, ஒரு யோசனையை உயிர்ப்பித்து, நீங்கள் பார்ப்பது போல் அதை ஒரு தலைசிறந்த படைப்பாக மொழிபெயர்க்க நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்துள்ளோம். எம்.எஸ். தோனி அதர்வாவாக நடித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தோனியின் கதாபாத்திரம் உட்பட நாவலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கலைப்படைப்புகளும் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டு, உலகின் ஒவ்வொரு நுணுக்கமும் விரிவாகக் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கூறுகளும் - அட்டைக்கு அட்டை - எங்கள் ஆர்வத்திற்கு ஒரு சான்று. அதர்வா- தி ஆரிஜின் என்பது உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அதன் தெளிவான விளக்கப்படங்களுடன் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய கால கிராஃபிக் நாவல் ஆகும்.

முன்கூட்டிய ஆர்டர் இந்த மாதம் தொடங்கும் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். மோஷன் போஸ்டரின் விரைவான பார்வையை அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ms Dhoni

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: