தமிழகத்தில் வடமாநில தொழிலார்கள் குறித்து பேசி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவதோடு மட்டுமல்லாமல் வழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சொன்னால் என்னையே தெலுங்கன் என்று சொல்கிறார்கள் என பிரபல பத்திரிக்கையாளர் முக்தார் அகமது கூறியுள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்து பிறகு சீரியல் நடிகராக மாறிய பிரஜின் பத்மநாபன் தற்போது டி3 என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரபல பத்திரிக்கையளார் முக்தார் அகமது பேசும்போது பத்திரிக்கையாளர்கள் கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு வார்த்தை வைத்து அந்த வழக்கு எப்படி முடிந்தது என்பதை சொல்லும் திரைப்படமாக டி3 இருப்பதாக கூறியுள்ளனர். அந்த ஒரு வார்த்த ஊடகத்துறையில் உள்ள நமக்கும் பொருந்தும். ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல்வாதிகள் செய்யக்கூடிய செயல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
ஒரு அரசியல்வாதி தனது கட்சியில் வேட்பாளர் நிறுத்தும்போது சாதி ரீதியாக வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்று சொன்னார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அங்கு பெரும்பான்மை மிக்க ஒரு சாதியை சேர்ந்த வேட்பாளரை நிறுத்தினார். அப்போது அவரின் செயல்பாடு நேர்மை அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டது.
இது மட்டுமல்லாமல் சமீபத்தில் தமிழர்கள் நாம் அனைவரும் மிகவும் கவனிக்கக்கூடிய ஒரு விஷயமாக மாறியது தமிழகத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக அச்சுறுத்தலுமாக தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாழக்கூடிய தமிழர்களுக்கும் பெரும் ஆபத்தாக மொழி ரீதியாக பல பிரச்சனைகளை எழுப்ப முயற்சித்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை என்ற நிலையில், இனரீதியாக முயற்சியில் இறங்கியுள்ளனர்.
வடமாநில தொழிலானர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். இது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. வெளிநாடுகளில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதேபோல் வடமாநில தொழிலாளர்கள் இங்கு வந்து வாழ்கிறார்கள். நாம் இங்கு அவர்களை விமர்சனம் செய்யும்போது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஒரு அச்சமும் பயமும் ஏற்படுகிறது.
இதற்கு காரணம் இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் தான். அவர்கள் சற்று பொறுப்புடன் செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் நலனக் கருதி சிந்தனையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில அனைத்து மொழி பேசும் மக்களும் ஒற்றுமையுடன் வாழும் நிலை தொடர வேண்டும் தமிழகத்தில் மொழி ரீதியான இனரீதியாக பிரச்சனையை உருவாக்கி ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி இதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவது மட்டுமல்லாமல் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும்.
இதுபோன்ற விஷயங்கள் கேள்விகளை நாம் முன்னோக்கி எடுத்துச்செல்லும்போது கடைசியில் என்னையே தெலுங்கன் என்று சொல்லவிட்டார்கள் நான் வேலூர் மாவட்டம் குன்னத்தூர் என்ற ஒரு கிராமம். அங்குதான் எனது தந்தை பிறந்தார். வளர்ந்தார். எனது குடும்ப தொழில் பாய் பின்னுவது. எனது அப்பா ஒரு போஸ்ட் மேனாக இருந்து படிப்படியாக வளர்ந்து காவல்துறையில் பணியாற்றினார்.
நான் ஒரு தமிழன் எங்கள் வீட்டில் நாங்கள் தமிழில் தான் பேசுவோம். இப்படி பேசக்கூடிய நாங்கள் ஒரு கேள்வி கேட்கும்போது எங்களை பார்த்து முக்தார் தமிழர் இல்லை தெலுங்கர் என்று சொல்கிறார்கள். அதில் இருக்கும் வலியை இப்போது உணர்ந்தேன். இதுபோன்ற வலிகள் தமிழக மக்கள் எத்தனைபேர் உணர்ந்திருப்பார்கள். என்கூடவே இருக்கிறார்கள். ஆனால் திடீரென தெலுங்கர் என்று சொல்கிறார்கள். மனதிற்கு அவ்வளவு கஷ்டமாக உள்ளது என்று பேசியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/