கவினுக்கு வெற்றியை கொடுத்த டாடா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து அதன்பிறகு திரைப்பட நடிகராக உயர்ந்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், நட்புனா என்னானு தெரியுமா, லிப்ட் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நாயகனாக நடித்த டாடா படம் வெளியானது. ரொமான்டிக் படமாக வெளியான டாடா தற்போது நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வசூலை குவித்து வருகிறது. 3 நாட்களில் 6 கோடி வசூலித்துள்ள டாடா படம் கவினின் திரை பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.
அஜித் அழைத்தும் வராத விஷ்னுவர்த்தன்?
துணிவு படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் விக்னெஷ் சிவனின் கதையில் திருப்தியடையாத அஜித் மற்றும் லைகா நிறுவனம் படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்ட நிலையில், மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே அஜித் நடிப்பில் ஆரம்பம் பில்லா உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த விஷ்னுவர்த்தனை அஜித் அழைத்ததாகவும், அவர் இந்தியில் சல்மான்கான் உறவினரின் படத்தை இயக்கி வருவதால் அஜித் அழைத்தும் வர முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் வைரல் ட்விட்
இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வடமாநில பணியாளர்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதில். “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என ட்விட் செய்து இருக்கிறார்.
நீச்சல் வீரராக பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவனின் மகன்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரராக பல போட்டிகளில் பங்கேற்று பதங்கங்களை பெற்று வருகிறார் இதில், இந்தியாவில் நடைபெற்று வரும் தொடரில், 100, 200, 400, 1500 உளளிட்ட பிரிவுகளில் வேதாந்த் பதக்கம் வென்றுள்ளார். பிரபலங்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
காமெடி நடிகருக்கு ரெட்கார்டு?
தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகராக வலம் வரும் ரெட்டின் கிங்ஸ்லே, லெக் பீஸ் என்ற படததில் நடிக்க 10 நாட்கள கால்ஷீட் கொடுத்து 4 நாட்கள் மட்டுமே நடித்துள்ளார். அதன்பிறகு நடிக்க வரவில்லை என்பதால் படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அவருக்கு ரெட் கார்டு போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/