Advertisment
Presenting Partner
Desktop GIF

உனக்கு கணவர் வேணும்... மறுமணம் பற்றி பேசிய கலா மாஸ்டர் : மீனா சொன்னது என்ன?

2008-ம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளார்.

author-image
WebDesk
New Update
Meena Kala Master

நடிகை மீனா - நடன இயக்குனர் கலா

90-களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா தொடர்ந்து, அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல், உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Advertisment

1990-ம் ஆண்டு வெளியான நவயுகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான மீனா, ஒரு புதிய கதை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ராஜ்கிரனுடக் இவர் நடித்த என் ராசாவின் மனசிலே என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீனாவுக்கு பெரிய அறிமுகத்தையும் கொடுத்தது.

தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்     ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மீனா, கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள மீனா தற்போது மலையாளத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

2008-ம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய் மகளாக நடித்திருந்தார். இதனிடையே நுரையீரல் புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு வித்தியா சாகர் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் மீனாவின் சக நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே சமீப காலமாக மீனா 2-வது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், நடன இயக்குனர் கலா மாஸ்டர் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "எனக்கு மீனாவுடன் 25 வருட நட்பு உள்ளது. மீனாவின் கணவருக்கு உடல்நிலையை சரியில்லாமல் இருந்த அந்த 3 மாதம் நான் மீனாவுடன் தான் இருந்தேன்.

சினிமாக்கும் மீனா ஹீரோயினாக இருப்பதற்கும் சம்மந்தமே கிடையாது. மீனா ஒரு மென்மையான மனம் கொண்டவர். கணவன் இறந்த பிறகு, 'உனக்கு வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும், உனக்கு சின்ன வயசுதான்' என்று நான் சொன்னேன். அப்போது மீனா என்னை திட்டிவிட்டார். உங்க வேலையை பார்த்துட்டு போங்க, எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் என்று சொன்னார். நான் அதன்பிறகு எதுவும் பேசிவில்லை என்று கலா மாஸ்டர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Meena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment