வடசென்னை வருது கண்ணா... மாஸ் அப்டேட் கொடுத்த தனுஷ்; இட்லி கடை டிரெய்லர் விழாவில் பேச்சு

நடிகர் தனுஷை பார்க்க ரசிகர்கள் குவிந்ததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வழிகளை ரசிகர்கள் கீழே தழுவியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதனை தொடர்ந்து அங்கிருந்த பவுன்சர்கள் ரசிகர்களே அப்புறப்படுத்தினர்.

நடிகர் தனுஷை பார்க்க ரசிகர்கள் குவிந்ததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வழிகளை ரசிகர்கள் கீழே தழுவியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதனை தொடர்ந்து அங்கிருந்த பவுன்சர்கள் ரசிகர்களே அப்புறப்படுத்தினர்.

author-image
WebDesk
New Update
Dhanush Vada chennai

தனுஷ் இயக்கி நடித்து உள்ள இட்லி கடை திரைப்படத்தின் டிரைலர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் (ப்ரோஷன் மால்) வணிக வளாகத்தில் வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியீடு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ்,நடிகை நித்திய மேனன்,பிரபல முன்னணி நடிகர்களான சத்திய ராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்,பாடகர் சுவேதா மோகன், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

வணிக வளாகத்தில் உள்ள திறந்தவெளி இடத்தில் நடைபெற்றதால் சுமார் 7000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக வீசில் அடித்து கைத்தட்டி நடனம் ஆடினர். நடிகர் தனுஷ் மேடை பேசிக் கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் ஓடி வந்து தனுசை கட்டிபிடித்துதால் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த பாதுகாவலர்கள் அந்த இளைஞரை பிடித்து இழுத்து சென்றனர் பின்னர் அவரை மீண்டும் மேடைக்கு அழைத்த தனுஷ் போட்டோ எடுத்து கொண்டார்.

அதேபோல அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள் முதல் குழந்தைகள் வரை சிக்கி தவித்தனர். அதனை தொடர்ந்து கூட்டம் நெரிசலில் 2 பெண்கள் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். நடிகர் தனுஷை பார்க்க ரசிகர்கள் குவிந்ததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வழிகளை ரசிகர்கள் கீழே தழுவியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதனை தொடர்ந்து அங்கிருந்த பவுன்சர்கள் ரசிகர்களே அப்புறப்படுத்தினர்.

அப்போது ரசிகர்கள் ஆக்கிரமடைந்து சேர்களை தூக்கி வீசிய காட்சி பொதுமக்கள் உடைய அச்சத்தை ஏற்படுத்தியது. மேடையில் பேசிய, பார்த்திபன். 35 வருடம் சினிமாவில் உள்ளேன். அதில் 4 பேரை மட்டும் தான் இயக்குனராக ஏற்று கொண்டேன். அதில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவன் ரொம்ப பிடிக்கும். நல்ல கதையை எடுத்தார். நடிகர்கள் வாழ்க்கையில் கொஞ்ச நாள் தான் உச்சத்தில் இருக்கிறார்கள். நடிகர் சத்தியராஜ் வாழ் நாளில் மிகப்பெரிய ஸ்டார் தான் இருப்பார். விஜயம் யார் வேணாலும் செய்யலாம் ஆனால் ஜெயம் உங்கள் கையில் உள்ளது. 2026 நான் தான் சி.ம் என தெரிவித்தார்

Advertisment
Advertisements

தொடர்ந்து பேசிய சத்யராஜ், கொங்கு தமிழில் பேசி ரசிகர்களை உற்சாகம்படுத்தினர். தம்பி தனுஷ் கூட நடிக்க ரொம்ப நாள் ஆசை தற்போது அவர் இயக்கிய மற்றும் நடித்த படத்தில் நடித்துவிட்டேன். தம்பி பார்த்திபனுக்கு ரொம்ப லொள்ளுங்க என கிண்டல் செய்தார். தம்பி தனுஷ் தேசிய விருது வாங்கி உள்ளார் .தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் கலக்கி வருகிறார். ஆங்கிலத்தை மரியாதையாக பேசும் ஊர் கோவை தான் என கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பேசுகையில், இந்த படம் வெற்றி பெற வேண்டும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ரசிகர்களை உற்சாகப்படுத்த தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் பாடல் பாடினார் அவருடன் சேர்ந்து ரசிகர்களுக்கும் சேர்ந்து பாடினார்கள்

தொடர்ந்து பேசிய தனுஷ், என்னுடைய ரசிகர்கள் யார் பக்கமும் போக மாட்டார்கள். அதில் எனக்கு பெரிய கர்வமும் கவுரவமும் இருக்கிறது. ரிவ்யூவை யாரும் நம்பாதீர்கள் உங்கள் நண்பர்கள் கூறுவதை கேட்டு படத்தை பாருங்கள் மேலும் நிறைய தொழில்கள் சினிமாவை நம்பி உள்ளது. சரியான விமர்சனங்களை பார்த்து படத்துக்கு போங்கள். வடசென்னை வருது கண்ணா அடுத்த வருஷம் என்று ரசிகர் மற்றும் பொதுமக்களுக்கு அப்டேட் கொடுத்தார். அதன்பிறகு, பாடகி ஸ்வேதா மோகனுடன் இணைந்து இட்லி கடை படத்தில் இடம்பெற்ற பாடல் பாடி ரசிகர்களுக்கு தனுஷ் உற்சாகமூட்டினார்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: