Advertisment

உங்களை கலங்கடிக்கும் உலகம்: அழுவதற்கு தயாராகுங்கள்: வாழை படத்திற்கு பாலா, தனுஷ், கார்த்தி பாராட்டு!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dhanush Karthi Bala

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள வாழை படம் ஆகஸ்ட் 23-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படம் குறித்து முன்னணி நட்சத்தரங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பறியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்ராஜ். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், பல முக்கிய பிரபலங்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து தனுஷ் நடிப்பில், கர்ணன் என்ற படத்தை இயக்கினார். ஒரு கிராமத்தில் நடக்கும், பிரச்சனையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படமும் வரவேற்பை பெற்றது.

பரியேறும் பெருமாள், கர்ணன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ், தனது 3-வது படமாக மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார். வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு மாரி செல்வராஜ் யாருடைய நடிப்பில் படத்தை இயக்க உள்ளார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அடுத்தாக அவர் வாழை என்ற படத்தை இயக்க உ்ளளதாக அறிவிப்பு வெளியானர்.

கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் நாளை (ஆகஸ்ட் 23) வெளியாக உள்ள நிலையில், மாரி செல்வராஜ் தான் சிறுவயதில் இருக்கும்போது சந்தித்த ஒரு கோர விபத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு வெளியாகும் முன்பே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்திருந்த தனுஷ் தற்போது வாழை படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பதிவில், சிரிக்கவும், கைத்தட்டவும் தயாராகுங்கள். உங்களை கலங்கடிக்க செய்யும் உலகத்திற்கு நுழைய தயாராகுங்கள். உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் ஒரு படைப்பு வாழை. இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால் அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி. சந்தோஷின் இசையையும் தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் வலிகளையும் அழகாய் சொல்லியிருக்கிறார். நடிப்பு என்று எதையும் சொல்லி விட முடியாது அவ்வளவு யதார்த்தம். வாழை பார்த்தபின் மாரி செல்வராஜ் மீது அன்பு உண்டாகிறது என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே வாழை படம் பார்த்த இயக்குனர் பாலா, பேச வார்த்தை இல்லாமல், இயக்குனர் மாரி செல்வராஜூவை கட்டிப்பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, அவரது கைகளை பிடித்துக்கொண்டு நீண்டநேரம் அமர்ந்திருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment