/indian-express-tamil/media/media_files/2025/04/04/AckAUXMMTIwDjEFwl7NJ.jpg)
தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில் தனுஷ் முருகன் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாகவும், படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு அரங்கில் நாளை (செப்டம்பர் 14) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், என பன்முக திறமையுடன் வலம் வரும் நடிகர் தனுஷ், தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், ஹாலிவுட் வரை சென்று நடித்துள்ளார். கடைசியாக தனது 50-வது படமான ராயன் படத்தை இயக்கிய நடித்திருந்த தனுஷ் இந்த படத்தின் மூலம் பெரிய வெற்றியை பெற்றிருந்தார். சன்பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.
இதனிடையே தற்போது தனுஷ் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் இட்லி கடை. நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துடன் டவுன் பிச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 1-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரெட்ஜெய்ணட் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடிக்கும் கேரக்டர்கள் பெயர்கள் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் பார்த்திபன் ஆர்,அறிவு என்ற போலீஸ் கேரக்டரிலும், சமுத்திரக்கனி மாரிச்சாமி என்ற கேரக்டரிலும், நித்யா மேனன் கயல் என்ற கேரக்டரிலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனுஷ் நடிக்கும் கேரக்டரின் பெயர் முருகன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதேபோல் அருண் விஜய் அஸ்வின் என்ற கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.
It's time for MURUGAN's entry 🔥@dhanushkraja to light up Nehru Stadium tomorrow - the grand audio launch begins at 5PM🧨🏟️#IdliKadai in theatres from the 1st of October ♨️#IdliKadaiCharacterIntroduction@dhanushkraja@arunvijayno1@DawnPicturesOff@RedGiantMovies_… pic.twitter.com/fwGg1hWLvw
— Red Giant Movies (@RedGiantMovies_) September 13, 2025
இட்லி கடை படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை (செப்டம்பர் 14)சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவின் பாராட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், இட்லி கடை இசை வெளியீட்டு விழாவுக்கான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.