டாப்ஸிக்காக முன் வந்த தனுஷ்!

தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் டாப்ஸி, தமிழுக்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.  

By: May 29, 2019, 10:10:01 AM

முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகை டாப்ஸி.

தற்போது ’கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதனை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸும், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இதனை தயாரித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நிலையில், இதன் ட்ரைலர் நாளை மதியம் 1 மணிக்கு வெளியாகிறது.

இதில் தமிழ் ட்ரைலரை நடிகர் தனுஷும், தெலுங்கு ட்ரைலரை தெலுங்கு நடிகர் ராணாவும் வெலியிடுகிறார்கள். முன்னதாக இந்தி ட்ரைலரை இயக்குநர் அனுராக் கஷ்யாப் வெளியிடுவார், என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இதனை டாப்ஸியே வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் டாப்ஸி, தமிழுக்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil cinema dhanush tapsee game over trailer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X