/tamil-ie/media/media_files/uploads/2023/04/Dhanush-Maari.jpg)
தனுஷ் - மாரி செல்வராஜ்
மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிராக தனுஷ வாத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து தனுஷ் தனது 50-வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே இயக்குனர் மாரி செல்வராஜூன் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளியான கர்ணன் படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது.
இந்தப் படத்தில், இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், கர்ணன் படம் வெளியாகி 2-வது வருடத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அறிவிப்பை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ், “பல காரணங்களுக்காக சிறப்பு வாய்ந்த ஒரு மதிப்புமிக்க கூட்டணி. ஓம் நமசிவாய என்று பதிவிட்டுள்ளார்.
ஜீ ஸ்டுடியோவின் சவுத் மூவிஸ் தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால் படத்தைப் பற்றிப் பேசுகையில், “வுண்டர்பார் ஃபிலிம்ஸுடனான இந்த மதிப்புமிக்க திட்டத்தில் எங்கள் ஒத்துழைப்பை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பெருமைப்படுகிறோம். இந்த திரைப்படம் வெற்றிகரமான கர்ணன் கூட்டணி மீண்டும் இணையும் தருணம். இதை ரசிகர்களிடம் கொண்டு செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தனுஷ் தனது சிறப்பான மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்துள்ளார். தனது படங்களின் மூலம் பாராட்டுக்களை பெறும் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு எங்களின் முழுமையான மரியாதை மற்றும் பாக்கியம் என்று கூறியுள்ளார்.
A prestigious project which is special for so many reasons. Om Namashivaya @mari_selvaraj@wunderbarfilms@zeestudiossouthpic.twitter.com/cgxpWN7jk0
— Dhanush (@dhanushkraja) April 9, 2023
தனுஷ் மற்றும் மாரி செல்வராஜின் முதல் கூட்டணியில் கர்ணன் 2021ம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. தனுஷ் தனது நட்சத்திர அந்தஸ்தை விட்டு வெளியேறி, அவரது கதாபாத்திரத்தின் அழகற்ற அம்சங்களை மிகுந்த நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு நடித்துள்ளார். ஒரு கோபமான இளைஞனாக உணரக்கூடிய நடிப்பை வழங்கியுள்ளார். உயிருடன் இருக்க தனது சுயமரியாதையை இனி தியாகம் செய்ய முடியாது என்ற ஒரு சாதாரண மனிதனின் நடவடிக்கையை பிரதிபலித்துள்ளதது.
லால், ரஜிஷா விஜயன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, யோகி பாபு, கௌரி ஜி. கிஷன் உட்பட சிறு குழந்தைகள், முதியவர்கள், மாடுகள் நாய்கள், குதிரை மற்றும் கழுதை உள்ளிட்ட விலங்குகள் கூட இந்த படத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.