வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பாடகி ஸ்வேதா மோகனுடன் இணைந்து நடிகர் தனுஷ் பாடிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில். தனுஷ் பாடும் பாடலுக்கும் பெரிய வெற்றியை பெற்று வருகிறது.
இந்நிலையில், தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில தயாராகியுள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கியுள்ளார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சாய் குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன் இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தெலுங்கில் சார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடயே வாத்தி படம் வரும் 17-ந் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்பே படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில, கடந்த பிப்ரவரி 4-ந் தேதி நடைபெற்ற வாத்தி இசை வெளியீட்டு விழா தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடகி சுவேதா மோகனுடன் இணைந்து விழா மேடையில் பாடியுள்ளார்.
இந்த பாடல் தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், இந்த பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“