/tamil-ie/media/media_files/uploads/2022/01/Dhanush-Sir-title.jpg)
Actor Dhanush Vaathi Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களை தொடர்ந்து தற்போது நேரடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் தோலி ப்ரேமா என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வரும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தில் தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் எஸ் நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்து வரும் இப்படத்தில், ஒளிப்பதிவாளர் பணியாற்றி வந்த தினேஷ் கிருஷ்ணன் தற்போது வாத்தி படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திடீரென இவர் விலகியது தனுஷ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர் விலகளுக்காக காரணங்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனுஷ் நடிக்கும் படத்தில் தன்னால் நடிக்க பணியாற்ற முடியமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்று பதிவிட்டுள்ளார். தனுஷ் கல்லூரி ஆசிரியராக நடிக்கும் இப்படம் ஒரு சாமானியனின் லட்சிய பயணம் என்று கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தில் இருந்து இருந்து ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் விலகியயுள்ளார்.
நவின் நூலி எடிட்டராக பணியாற்றி வரும் நிலையில், தினேஷ் கிருஷ்ணனுக்கு பதிலாக யார் ஒளிப்பதிவு செய்வார் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இப்படம் கல்லூரி மாஃபியாவைச் சுற்றி வரும் கதை என்றும்,, கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக ஒரு இளைஞனின் போராட்டத்தை முன்னிலைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.