சிவாஜியின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
2015-ம் ஆண்டு வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படம் அடல்ட் படமாக இருந்ததால் வெற்றி பெற்ற நிலையில், அடுத்து 2017-ம் ஆண்டு இயக்கிய சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு தபாங் 3 படத்திற்கு தமிழ் டைலாக் மட்டும் எழுதியிருந்தார்.
6 வருட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு பஹீரா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் விஷால் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து 100 கோடி வசூல் க்ளப்பில் இணைந்தது. மேலும் விஷாலுக்கு ஹிட் கொடுத்த படமாகவும் அமைந்தது.
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கே.3, நேர்கொண்ட பார்வை, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், சிவாஜி கணேசனின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவுக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
அதன்படி இன்று ஆதிக் – ஐஸ்வர்யாவின் திருமணம் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்ற இந்த திருமணத்தில் நடிகர் விஷால் பலந்துகொண்டார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படம் தற்போது இணைதயத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு குணால் என்பரை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரந்த நிலையில், தற்போது இயக்குனர் ஆதிக்கை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“