Dhractor Aishwarya Birthday With To Dhanush Brother : தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து செல்வதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர். கடந்த 2004-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்
இந்நிலையில், இவர்களின் பிரிவு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இரு தரப்பு குடும்பத்தினரும் தம்பதியை மீண்டும் சேர்த்து வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது அதிலும் குறிப்பாக தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, தனுஷ் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே குடும்ப சண்டைதான் அவர்கள் பிரியவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்
இதனைத் தொடர்ந்து தனுஷ் தெலுங்கு படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற நிலையில், அவர் தங்கிய அதே ஹோட்டலில், ஆல்பம் ப ஷூட்டிங்கிற்காக சென்ற ஐஸ்வர்யாவும் அதே ஹோட்டலில் தங்கியிருந்தார். ஆனால் விவாகரத்து அறிவிப்புக்கு இருவரும் இதுறித்து மீடியாவிடம் எதுவும் பேசாத நிலையில், தனுஷ் தற்போது தனது தெலுங்கு/தமிழ் இரு மொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ மற்றும் அண்ணன் செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் வரும் மார்ச் 11 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது புதிய மியூசிக் ஆல்பத்தின் பணிகளை முடித்தள்ளார். இந்த பாடல் வரும் மார்ச் 8 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், தனுஷின் அண்ணனும் பிரபல இயக்குநருமான செல்வராகவன் நேற்று (மார்ச் 05) தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நாளை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் அவர் இயக்கி வரும் நானே வருவேன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் செல்வராகவனுக்குபிறந்தநாள் வாழ்த்துக்களை கூறும் வகையில், அவரை கட்டிப்பிடித்ததுக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் குரு, நண்பர், தந்தை உருவம் என்று பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ஒட்டுமொத்த செல்வராகவன்-தனுஷ் குடும்பமும் உணர்ச்சி மிகுதியில் ஆழ்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் உள்ள ரசிகர்கள், திரை பிரபலங்கள் அனைவரும், தனுஷ் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே சின்ன சண்டைதான் விரைவில் இருவரும் பேசி சமாதானம் ஆகிவிடுவார்கள். அதற்கு இந்த பதிவு மற்றொரு வாய்ப்பாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“