தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/aishwarya-shankar-3jpg)
கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, ராம்சரன் நடிப்பில் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வரும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் கடந்த 2022-ம் ஆண்டு ஐஸ்வர்யா ஷங்கருக்கு புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன், ரோகித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு முக்கிய நபர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/aishwarya-shankar-1jpg)
திருமணம் முடிந்த சில மாதங்களில் ரோகித் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவரின் வீ்ட்டில் 6 மாதங்கள் மட்டுமே இருந்த ஐஸ்வர்யா, கணவர் கைது செய்யப்பட்டவுடன் மீண்டும் தனது அப்பா ஷங்கரிடம் தஞ்சமடைந்தார். மேலும் ரோகித் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பது அதன்பிறகு தெரியவந்தது. இதனால் ரோகித்திடம் இருந்து ஐஸ்வர்ய சட்டப்படி பிரிந்துவிட்டார்.
/indian-express-tamil/media/media_files/aishwarya-shankar-5jpg)
/indian-express-tamil/media/media_files/aishwarya-shankar-4jpg)
/indian-express-tamil/media/media_files/aishwarya-shankar-2jpg)
அதன்பிறகு வீட்டில் இருந்த ஐஸ்வர்யாவுக்கு மீண்டும் ஒரு வாழக்கையை அமைத்து தர முடிவு செய்த ஷங்கர், தன்னிடம் உதவியாளராக இருந்து வரும் தருண் கார்த்திகேயன் என்பவரை தனது மகளுக்கு பேசி முடித்து நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அதிதி ஷங்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்கள் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“