/indian-express-tamil/media/media_files/2025/06/15/lFMHhMsWztuWciGBtQZf.jpg)
சூர்யா - லிங்குசாமி கூட்டணியில் வெளியான அஞ்சான் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த நிலையில், இந்த படத்தின் ரீ-எடிட்டடு வெர்ஷன் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.
ஆனந்தம் என்ற மெகாஹிட் குடும்ப பட வெற்றியுடன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிகமான லிங்குசாமி, அடுத்து, ரன், வேட்டை,, பையா, சண்டைக்கோழி, உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தார். இயக்குனராக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளராகவும் இருந்த லிங்குசாமி, பையா, வேட்டை, அஞ்சான் ஆகிய படங்கள் மட்டுமல்லாமல், கமல்ஹாசனின் உத்தம வில்லன் உள்ளிட்ட சில படங்களையும் தயாரித்துள்ளார்.
இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கிய படம் அஞ்சான். சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், வெளியானபோது, படுதோல்வியை சந்தித்தது. இதற்கு பல முக்கிய காரணங்கள் சொல்லப்பட்டாலும், நான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையும் இதில் கொடுத்திருக்கிறேன் என்று லிங்குசாமி கூறியிருந்தார்.
படம் வெளியானபோது, கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், அதிகம் ட்ரோல்களை சந்தித்த படமாகவும் மாறியது. அதே சமயம் இந்த படத்தை இந்தியில் வாங்கி ரீ-எடிட் செய்து, யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இந்தி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. படத்தின் இந்தி பதிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து மீண்டும் வெளியிட உள்ளதாக இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.
#Anjaan Re-Edited Version 🔜
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 15, 2025
pic.twitter.com/m4itOH46Iq
இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அஞ்சான் படத்தை இந்தியில் வாங்கிய ஒருவர் அதனை ரீ-எடிட் செய்து யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்த படம் அந்த ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதை பார்த்தபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இதை நம்மால் செய்ய முடியுவில்லையே என்று யோசித்தேன். இப்போது அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து வெளியிடும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். எப்படி வருகிறது என்று பார்ப்போம் என கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.