Advertisment

புடவையில் வந்த நயன்தாரா: மனைவியுடன் கியூட் போஸ் கொடுத்த அட்லீ: அம்பானி இல்ல திருமணத்தில் திரை பிரபலங்கள்

அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற திரையுலக பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Atlee and Nayanthara

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்செண்ட் திருமணம் விழாவில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்செண்ட் திருமண ஏற்பாடுகள் கடந்த 6 மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், குஜராத்தின் ஜாம் நகரில், இந்த ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் நடைபெற்றது. ஹாலிவுட் பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், உலக வணிக தலைவர்கள் என பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் கோலாகலமாக இன்று நடைபெற்ற நிலையில், இந்திய சினிமா, விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட துறைகளின் முக்கிய நபர்கள் இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர். மேலும் பிரபல குத்துச்சண்டை வீரரான ஜான்சீனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.  அதேபோல் நடிகா ரஜினிகாந்த், கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி, இயக்குனர் அட்லி, உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக உலக அரங்கில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு முகேஷ் மற்றும் நீதா ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த திருமணம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் பட்டு வேட்டி சட்டையுடன் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், நடனமாடி அசத்திய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த திருமண விழாவில் தனது மனைவியுடன் பங்கேறறிருந்த இயக்குனர் பத்திரிக்கையாளர்களுக்காக போஸ் கொடுத்தார். அதேபோல் சேலையில் வந்த நயன்தாரா, சேலையில் பங்கேற்றிருந்தார். கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரும் திருமண விழாவில் நடனமாடி அசத்தினர். இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த திருமண விழாவில் வரும் ஜூலை 14-ந் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Atlee Nayanthanra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment