/indian-express-tamil/media/media_files/2024/11/30/vXZehCjeDxOKmBoWVI2x.jpg)
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் கே.பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தனது மனைவியின் பிரசவத்தின்போது எம்.ஜி.ஆர் தனக்கு கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாராதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ், புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், இன்றுபோய் நாளை வா, ஒரு கை ஓசை, தூரல் நின்னு போச்சு உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஹீரோவாக நடித்து வெற்றி கண்டார். குறிப்பாக பெண் ரசிகைகளுக்கு பிடித்தமான நாயகனாக வலம் வந்த பாக்யராஜ் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக இடம் பிடித்தார்.
அதேபோல், எம்.ஜி.ஆர், நடித்து பாதியில் நின்றுபோன, அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தை கையில் எடுத்துக்கொண்டு தனியாக திரைக்கதை அமைத்து, அவசர போலீஸ் 100 என்ற பெயரில் வெளியிட்டு வெற்றி கண்டார். இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் பாக்யராஜ் இடையே நெருக்கமான உறவு இருந்தபோது, எனது கலையுலக வாரிசு பாக்யராஜ் தான் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார் . இதற்கு காரணம் என்ன என்பது குறித்து பாக்யாஜூ ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
சினிமாவில் நான் செய்ய பல வருடங்கள் எடுத்துக்கொண்ட செயல்களை இந்த பையன் ஆரம்பித்த சில வருடங்களில் செய்திருக்கிறான். எனக்கென்று ஒரு பெரிய மாஸ் வருவதற்கு எனக்கு பல ஆண்டுகள் ஆனாது. ஆனால் இவ்வளவு சின்ன வயதில் பாக்யராஜூவுக்கு அந்த மாஸ் கிடைத்துள்ளது. இதனால் தான் அவரை எனது கலை வாரிசு என்று அறிவித்தேன் என்று எம்.ஜி.ஆர் ஒரு பொதுக்கூட்டத்தில் தெளிவுபடுத்தியதாக, பாக்யராஜ் கூறியிருந்தார்.
இதனிடையே, ஒருமுறை, தேர்தல் பிரச்சாரத்திற்காக பாக்யராஜ் அருப்புக்கோட்டை சென்றுள்ளார். ஆனால் பாதி வழி செல்லும்போதே, மனைவி பூர்ணிமா பிரசவத்திற்காக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார் என்று சொன்னார்கள். தேர்தலுக்கு 2 நாட்கள் மட்டும் தான் இருந்தது. அதனால் பாதி தூரம் சென்றுவிட்டதால், நான் திரும்பி சென்றாலும், அங்கு குழந்தை பிறந்துவிடும் என்பதால் பிரச்சாரத்திற்கே கிளம்பிவிட்டேன். எனது மாமியாரை கையெழுத்து போட சொன்னேன்இ ஆபரேஷன் முடிந்து குழந்தை பிறந்துவிட்டது.
அன்பிறகு எம்.ஜி.ஆரை சந்தித்து ஸ்வீட் கொடுத்தேன். மத்தவங்க எல்லாம் என்ன தலைவருக்கு சுகர் இருக்கு எதுக்கு ஸ்வீட் என்று கேட்க, எம்.ஜி.ஆர் என்ன விஷயம் என்று கேட்க, வரும்போது தான் போன் வந்தது குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் முகம் மாறி நீ அங்க போகலையா என்று கேட்டுள்ளார். தேர்தலுக்கு 2 நாள் தான் இருக்கிறது அதனால் இங்கு வந்தேன் என்று சொல்ல, இல்ல விமானம் இருக்கு அதுல போய்ட்டு நாளைக்கு வா அப்புறம் பிரச்சாரம் வச்சிக்கலம் என்று கூறியுள்ளார்.
பரவாயில்லை நல்லத்தான் இருக்காங்க, போன் வந்துடுச்சி என்று பாக்யராஜ் சொல்ல, பிரச்சாரம் தொடங்கியுள்ளது. நான் செல்லும் இடம் எல்லாம் எனக்கு போன்வரும் பூர்னிமா பேசுறாங்க என்று. நான் கவலைப்பட கூடாது என்று ஹாஸ்பிடலில் ஒரு ஆள் வைத்து எம்ஜி.ஆர் இந்த வேலையை செய்துள்ளார் என்று பாக்யராஜ் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.