Advertisment

டைலாக் இல்லாத ஆக்ஷன்... கர்ஜணையில் மிரட்டும் அருண் விஜய் : வணங்கான் டீசர் எதை குறிக்கிறது?

கடைசியாக நாச்சியார் படத்தை இயக்கிய பாலா, 4 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது வணங்கான் படத்தை இயக்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Bala Vanangan Arun Vijay
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அருண் விஜய் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவில், சில படங்களை இயக்கினாலும், அதில் வியக்கத்த கதையம்சத்தை வெளிப்படுத்தி வருபவர் இயக்குனர் பாலா. 1999-ம் ஆண்டு வெளியான சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலா, அடுத்து நந்தா, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், பரதேசி உள்ளிட்ட சில படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

பாலா இயக்கிய அனைத்து படங்களுமே ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியதில்லை. அதேபோல் சேது படத்தின் மூலம் விக்ரம், நந்தா படத்தின் மூலம் சூர்யா, நான் கடவுள் ஆர்யா, பரதேசி அதர்வா என பல நடிகர்களுக்கு தனது படத்தின் மூலம் வெற்றியை கொடுத்த பாலா, கடைசியாக நாச்சியார் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

ஜோதிகா ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்திருந்த நாச்சியார் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து 4 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது வணங்கான் படத்தை இயக்கியுள்ளார். முதலில் சூர்யா நாயகனாக அவரது தயாரிப்பிலேயே தொடங்கப்பட்ட வணங்கான் திரைப்படம், ஒரு கட்டத்தில் பாதியில் நிறுத்தப்பட்டு சூர்யா வெளியேறினார்.

அதன்பிறகு இந்த கதையில் அருண் விஜய் நாயகனாக நடிக்க படத்தின் தயாரிப்பாளராக பாலாவே களமிறங்கினார். அதன்பிறகு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் தயாரிப்பாளராக இணைந்ததை தொடர்ந்து படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வணங்கான் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. படங்களில் இதுவரை ஸ்டைலிஷானா நடிகராக வலம் வந்த அருண் விஜய் இந்த படத்தில் பாலாவுக்கு ஏற்ற நாயகனாக தனது கெட்டப்பில் வித்தியாசம் காட்டியுள்ளார்.

அதேபோல் வணங்கான் டீசரில், வசனமே இல்லாத நிலையில், அருண் விஜய் தனது பார்வை மற்றும் கர்ஜணையில் மிரட்டியுள்ளார். அவரது தோற்றமே வித்தியாசமாக பிதாமகன் படத்தின் விக்ரமை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. மற்றும் ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால், பாலாவின் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் ஒளிப்பதிவில் சற்று வித்தியாசத்தை காட்டியுள்ளார். டீசரை பார்க்கும்போது அருண் விஜய் கோபமான எதையும் எதிர்க்கும் ஒரு இளைஞனாக நடித்துள்ளார்.

ஜெயமோகனின் அறம் என்ற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது என்ற வதந்திக்கு டீஸர் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அறம்  சிறுகதை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாகக் கொண்ட நிலையில், வணங்கான் படம் தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் கதை என டீசரின் மூலம் தெரியவந்துள்ளது. படத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி, ரிதா, சாயாதேவி, பாலா சிவாஜி, சண்முகராஜன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடர் தோல்வி படங்களை கொடுத்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் ஒரு பிரேக்காக அமைந்த நிலையில், தற்போது வணங்கான் அவரின் சினிமா கெரியரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், வர்மா படத்தின் மூலம் கடும் விமர்சனங்களை சந்தித்த பாலா, தற்போது வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Arun Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment