பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில், சில படங்களை இயக்கினாலும், அதில் வியக்கத்த கதையம்சத்தை வெளிப்படுத்தி வருபவர் இயக்குனர் பாலா. 1999-ம் ஆண்டு வெளியான சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலா, அடுத்து நந்தா, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், பரதேசி உள்ளிட்ட சில படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.
பாலா இயக்கிய அனைத்து படங்களுமே ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடைசியாக நாச்சியார் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஜோதிகா ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்திருந்த நாச்சியார் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து 4 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது வணங்கான் படத்தை இயக்கியுள்ளார்.
முதலில் சூர்யா நாயகனாக அவரது தயாரிப்பிலேயே தொடங்கப்பட்ட வணங்கான் திரைப்படம், ஒரு கட்டத்தில் பாதியில் சூர்யா வெளியேறியதால் படம் நிறுத்தப்பட்டு, அதன்பிறகு அருண் விஜய் நாயகனாக நடிக்க படத்தின் தயாரிப்பாளராக பாலாவே களமிறங்கினார். அதன்பிறகு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் தயாரிப்பாளராக இணைந்ததை தொடர்ந்து படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisment
Advertisement
இதனிடையே வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. படங்களில் இதுவரை ஸ்டைலிஷானா நடிகராக வலம் வந்த அருண் விஜய் இந்த படத்தில் பாலாவுக்கு ஏற்ற நாயகனாக தனது கெட்டப்பில் வித்தியாசம் காட்டியுள்ளார். அதேபோல் டைலாக் இல்லாமல் இருந்த வணங்கான் டீசரில் அருண் விஜய் தனது சிறப்பான ஆக்ஷன் மற்றும் கர்ஜணையுடன் வந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதனையடுத்து வணங்கான் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. டீசரை போல் இல்லாமல், சண்டைக்காட்சிகள் மற்றும் குறைந்த வசனங்களுடன் வெளியான இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தில் நாயகி, மிஷ்கின், சமுத்திரக்கனி என ஒரு சில கேரக்டர்கள் டைலாக் பேசினாலும் அருண் விஜயக்கு ஆக்ஷன் மற்றும் ஜாலியாக காட்சிகள் மட்டுமே இருக்கிறது. அவருக்கு டைலாக் இல்லை என்பதால், அவர் இந்த படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
டிரெய்லரின் இறுதி காட்சியின் கம்மிங் சூன் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் மீதான எதிர்பார்பும் அதிகரித்துள்ளது. மேலும் வணங்கான் படத்தை பார்த்த சில முக்கிய நபர்கள் பாலா இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளதாகவும், அருண் விஜயின் கெரியரில்வணங்கான் முக்கிய படமாக இருக்கும் என்றும் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“