முன்னணி இசையமைப்பாளராக தன்னை இன்றுவரை நிலைநிறுத்திக் கொண்டுள்ள இளைராஜா சில சமயங்களில் தனது சர்ச்சை கருத்தால் கடுமையாக விமர்சனங்களை சந்திதிருந்தாலும், புதுமுகம் மற்றும் பட்ஜெட் படம் இயக்கும் இயக்குனர்களுக்கு சம்பளம் வாங்காமலும், சம்பளத்தை குறைத்துக்கொண்டும் இசையமைத்து கொடுத்துள்ளார்.
அந்த வகையில் இயக்குனர் பாரதி கண்ணன் இளையராஜா உடனான தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். 1996-ம் ஆண்டு வெளியான அருவா வேலு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதி கண்ணன். நாசர் ஊர்வசி இணைந்து நடித்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ஆதித்யன் இசையமைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாரதி கண்ணன் இயக்கிய 2-வது படம் கண்ணாத்தாள். நடிகை நீனா கரண், மணிவண்ணன், வடிவேலு வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் 1998-ம் ஆண்டு வெளியானர். இந்த படத்தை தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி தயாரித்திருந்தாலும், முதல் காப்பி அடிப்படையில் பாரதி கண்ணனே தயாரித்திருந்தார். இந்த படத்திற்காக இளைராஜாவிடம் இசையமைக்க கேட்டது குறித்து பாரதி கண்ணன் கூறியுள்ளார்.
கண்ணாத்தாள் படம் தொடங்கியபோது தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிதான் இளைரயாஜாவிடம் என்னை பேச சொல்லி அனுப்பி வைத்தார். நான் ஒரு பெரிய மாலை வாங்கிகொண்டு அவரை பார்த்து மரியாதை செலுத்திவிட்டு பேசினேன். கதையை கேட்டு இசையமைக்க ஒப்புக்கொண்டார். அன்று ஒரே நாளில் படத்திற்கான 7 பாட்டையும் கொடுத்துவிட்டார். மேலும் கதையில் சில இடங்களில் அவர் நெகிழ்ந்து போனார்.
படத்தின் 2-வது பாடல் அம்மன் புகழை பாட எனக்கு பாடலில் அவரது ரெப்ரன்ஸ் இருக்கும். அதேபோல் படததில் டெல்லி கணேஷ் தனது பிள்ளைகள் பசியில் இருப்பதை அறிந்து சாப்பாடு இல்லாததால் தான் நாதஸ்வரத்தை எடுத்து வாசிப்பார். இதை கேட்டுக்கொண்டே குழந்தைகள் தூங்கிவிடுவார்கள். அதேபோல் தனது மூத்தமகள் அங்கே கஷ்டப்படுகிறாள் என்பதை தெரிந்து கண்ணீர்விடுவார்.
அதன்பிறகு நான் இங்கெ கஷ்டப்படுவதை அம்மா தங்கையிடம் சொல்ல வேண்டாம் என்று மகள் சொன்னதை கேட்டு வீட்டுக்கு வருவார். அப்போது அவரது மனைவி குழந்தைகள் அனைவரும் அக்கா எப்படி இருக்கிறார் என்று கேட்க அப்போதும் நாதஸ்வரத்தை எடுத்து வாசிப்பார். வாசித்து முடிந்தவுடன் அப்படியே இறந்துவிடுவார். இந்த காட்சிகளை பார்த்து நெகிழ்ந்துபோன இளையராஜா மிகவும் பாராட்டினார். அதன்பிறகு எங்களது நட்பு இன்றுவரை தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil