/tamil-ie/media/media_files/uploads/2023/04/Bharathi-Raja-Kushboo.jpg)
பாரதிராஜா - குஷ்பு
தான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தால் அதற்கு அவள் தான் காரணம் என்று நடிகர் குஷ்புவை இயக்குனர் பாரதிராஜ் கண்டபடி திட்டிய சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுவபர் பாரதிராஜா. 1978-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா தொடர்ந்து, டிக் டிக் டிக்இ சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, கேப்டன் மகள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
80-90 காலகட்டத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமோ என்று நடிகர் நடிகைகள் ஏங்கும் அளவுக்கு இயக்கத்தில் சிறப்பை காட்டிய பாரதிராஜா, தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ள பாரதி ராஜா தற்போது படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், ராஜா குஷ்பு நடிப்பில் வெளியான கேப்டன் மகள் படத்தில் நடந்த சுவாரஸ்யமாக சம்பவம் குறித்து நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார். 1993-ம் ஆண்டு கேப்டன் மகள் படம் வெளியானது. முன்னணி இயக்குனராக திகழ்ந்த பாரதிராஜாவுக்கு பாம்பு என்றால் பயம். கேப்டன் மகள் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில், நடிகை குஷ்பு பல் பிடுங்கிய பாம்பை கையில் வைத்துக்கொண்டு பாரதிராஜாவிடம் சென்று பேசியுள்ளார்.
அப்போது திடீரென பாம்பை எடுத்தவுடன் பயந்துபோன பாரதிராஜா தலைதெறிக்க ஓடியுள்ளார். இதனால் படப்பிடிப்பில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அடுத்த சில நிமிடங்களில் பரபரப்பு அடங்கியுள்ளது. ஆனாலும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத பாரதி ராஜா நான் ஹாட் அட்டாக் வந்து செத்தால் இதற்கு இவள் தான் காரணம் என்று சொல்லி குஷ்புவை சராமாரியாக திட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் நடிகை குஷ்பு தனது பேட்டியில் கூறியுள்ளார். குஷ்புவின் இந்த பேட்டி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.