தமிழ் திரையுலகில் சிறுவயது முதலே நண்பர்களாக இருந்த இயக்குனர் பாரதிராஜா – இசையமைப்பாளர் இளையராஜா இருவருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து இயக்குனர் பாரதிராஜா வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா 16-வயதினிலே என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்நத தமிழ் சினிமாவை வெளியுலகிற்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரரான பாரதிராஜா 1977- ம் ஆண்டு இயக்கிய 16 வயதினிலே தொடங்கி 1993-ம் ஆண்டு இயக்கிய கேப்டன் மகள் படம் வரை இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.
அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அடுத்து பாரதிராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக தேர்வு செய்தார். ரஹ்மான் இசையில் அமைந்த கிழக்கு சீமையிலே படத்தின் அத்தனை பாடல்களும் இன்னும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
1992ம் ஆண்டு ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக பிரபலமான ஏஆர் ரஹ்மான், முதன்முறையாக கிராமத்துப் பின்னணியில் இசையமைத்த முதல் படம் கிழக்குச் சீமையிலே. இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் வேண்டாம் இளைராஜாதான் சரியாக இருக்கும் என்று பலர் பாரதிராஜாவுக்கு எடுத்து கூறியிருந்தாலும், அதை பொருட்படுத்தாதா பாரதிராஜா ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை என்று உறுதியாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இது குறித்து பேசிய பாரதிராஜா, இளையராஜாவுடன் சண்டை போட்டு தான் ஏஆர் ரஹ்மானிடம் சென்றேன். கிழக்குச் சீமையிலே படத்தில் இளையராஜாவுடன் சேர வேண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டாம் என்று பலர் என்னிடம் சொன்னார்கள் ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இரந்தேன். அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இந்த படத்திற்கு செட் ஆவார் என்று கேட்ட பலருக்கும் தனது இசையால் அப்போது பதிலடி கொடுத்தார் ஏஆர் ரஹ்மான் என்று பாரதிராஜா கூறியுள்ளார்.
கிழக்குச் சீமையிலே படத்திற்குப் பின் பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா, தாஜ்மஹால், கண்களால் கைது செய் உள்ளிட்ட படங்களுக்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படங்களில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததும் இன்றுவரை இந்த பாடல்களுக்கு இந்த தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும்படி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“